மூகாம்பிகை அம்மனை வழிபட்ட பிரதமர் ரணில் : நாளை மோடியுடன் சந்திப்பு

Published By: Priyatharshan

22 Nov, 2017 | 09:30 AM
image

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இந்­தி­யாவின் கர்­நா­டக மாநிலம் உடுப்­பியில் உள்ள கொல்லூர் மூகாம்­பிகை அம்மன் ஆல­யத்தில் நேற்று வழி­பா­டு­களை மேற்­கொண்டார்.  

நேற்று முற்­பகல் 11.15 மணி­ய­ளவில் கொல்லூர் அருகே உள்ள அர­சிரூர்  உலங்­கு­வா­னூர்தி இறங்கு தளத்தில் வந்­தி­றங்­கிய   பிர­தமர், ரணில் விக்­கி­ர­ம­சிங்க  அங்­குள்ள விடுதி ஒன்றில் தயா­ராகிக் கொண்டு மூகாம்­பிகை அம்மன் ஆல­யத்­துக்குச்  சென்றார். 

நேற்று முற்­பகல்  11.50 மணி­ய­ளவில் அங்கு பிர­த­ம­ருக்கு பூரண கும்ப மரி­யா­தை­யுடன் வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.. முகாம்­பிகை அம்­மனை தரி­சித்த பின்னர், அவர், சண்­டிக ஹோமத்­திலும் பங்­கேற்றார். 

பிர­த­மரின் வரு­கை­யை­யொட்டி மூகாம்­பிகை அம்மன் ஆலயப் பகு­தியில், பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. 

அத்­துடன் நேற்­றுக்­காலை 10 மணி தொடக்கம், பிற்­பகல்1.30 மணி­வரை ஆல­யத்­துக்குள் பக்­தர்கள் எவரும் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. 

கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம்­தி­கதி இந்த ஆல­யத்தில் வழி­பா­டு­களை செய்­வ­தற்­காக  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பெங்­க­ளூரு சென்­றி­ருந்தார்.

எனினும், கடும் மழை பெய்து கொண்­டி­ருந்த மோச­மான கால­நி­லையால் ஆலய தரி­ச­னத்தை கைவிட்டு கொழும்பு திரும்பும் நிலை ஏற்­பட்­டி­ருந்­தது.  இத­னை­ய­டுத்து  பிர­தமர்  புது­டில்­லிக்­கான  விஜ­யத்தின் போது  நேற்று  மூகாம்­பிகை அம்­மனை தரித்­துள்­ளமை  குறிப்­பி­டத்­தக்­க­தாகும். 

நேற்று கர்­நா­ட­க­மா­நிலம் சென்­றி­ருந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அங்­கி­ருந்து  புது­டில்லி  செல்­ல­வுள்ளார்.   புது­டில்­லியில்   நாளை  வியா­ழக்­கி­ழமை  பிர­தமர்  நரேந்­திர மோடி உட்­பட  பல­ரையும் சந்­தித்து  பேச்­சு­வார்த்தை  நடத்தவுள்ளமை குறிப்பிடத்ததாகும். பிரதமருடன்   அவரது மனைவி  மைத்தி விக்கிரமசிங்க , அமைச்சர் சாகல ரட்ணாயக்க உட்பட பலரும்  இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47