நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஆரம்பித்த சில நிமிடங்களில் முகாபே இராஜினாமா (UPDATE)

Published By: Devika

21 Nov, 2017 | 09:52 PM
image

பிந்திய செய்திகளின்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதம் ஆரம்பித்த சில நிமிடங்களில் முகாபே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு சபாநாயகர் அறிவித்துள்ளார்.

ஸிம்பாப்வே ஜனாதிபதி ரொபர்ட் முகாபே மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த விவாதம் அந்நாட்டு பாராளுமன்றில் ஆரம்பித்துள்ளது.

ஸிம்பாப்வே சுதந்திரம் பெற்ற 1980ஆம் ஆண்டு முதல் பிரதமராகப் பதவி வகித்த முகாபே, 1987ல் ஜனாதிபதியாகப் பதவியேற்றதையடுத்து, கடந்த முப்பது வருட காலமாக அதே பதவியில் தொடர்ந்து வருபவர்.

தற்போது 93 வயதாகும் முகாபேயின் பதவியைத் தன்வசப்படுத்திக்கொள்ள அவரது மனைவி கிரேஸ் முகாபே முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

அதை நடைமுறைப்படுத்திக்கொள்வதற்காக அந்நாட்டு அரசியல் சட்டங்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்த முயன்றதாக முகாபே மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவர் பதவி விலக வேண்டும் என்ற போராட்டங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றே வந்தன.

கடந்த வாரம் அந்நாட்டில் இராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது. என்றபோதும், தனது பதவியில் இருந்து விலக முகாபே மறுத்துவருகிறார்.

இந்நிலையிலேயே அவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பாராளுமன்றுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு, முகாபேயின் சொந்தக் கட்சியும் ஆதரவளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17