ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஆபத்து மிக்க படகு பயணத்தை மேற்கொண்டு கிரேக்கத் தீவான லெஸ்பொஸை வந்தடையும் குடியேற்றவாசிகளின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மேற்படி குடியேற்றவாசிகளால் அணியப்பட்டு கைவிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிர் காப்பு மேலங்கிகள் அந்த தீவுப் பிராந்தியத்திலுள்ள மொலிவொஸ் கிராமத்தில் 10 ஏக்கர் நிலப் பரப்பில் 5 மீற்றர் உயரத்துக்கு குவிந்திருக்கும் காட்சி ஆளற்ற விமானத்தைப் பயன்படுத்தி படமாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் கிரேக்கத் தீவுகளை தினசரி சுமார் 2,000 குடியேற்றவாசிகள் வந்தடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் கூறுகின்றன.