(ஆர்.யசி)

ரஷ்ய போர்க்கப்பல் இன்னும் வாங்கப்படவில்லை எனினும் இந்த ஆண்டு இறுதிக்குள் கப்பலை கொள்வனவு செய்வது குறித்து அறிவிக்கப்பட வேண்டும். அதனையடுத்து 40 மாதங்களின் பின்னரே எமக்கு கப்பலை பெற்றுக்கொள்ள முடியும் என நிதி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 

இலங்கை மற்றும் ரஷ்யா அரசாங்கங்களின் நேரடி உடன்படிக்கையாகவே இது அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிலையில் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டார்.