கொல்­கத்­தாவில் நடை­பெற்ற இந்­தி­யா­வுக்கு எதி­ரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியை இலங்கை அணி போராடி சம­நி­லையில் முடித்­தது. 

இலங்கை – இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்­கத்தா ஈடன்­கார்டன் மைதா­னத்தில் நடை­பெற்­றது. 

முதல் இரு நாட்­களில் மழையால் கணி­ச­மான ஓவர்கள் வீசப்­ப­டாத நிலையில், அதற்கு மத்­தியில் துடுப்­பெ­டுத்­தா­டிய இந்­தியா முதல் இன்­னிங்ஸில் 172 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது.

பின்னர் தனது முதல் இன்­னிங்ஸை ஆடிய இலங்கை 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்­கெட்­டுக்­களை இழந்து 165 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது. 

இந்த நிலையில் 4ஆவது நாளில் இலங்கை வீரர்கள் தொடர்ந்து துடுப்­பெ­டுத்­தா­டினர். 

உணவு இடை­வே­ளைக்கு பிறகு இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 294 ஓட்­டங்­களை சேர்த்து சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது. 

இது இந்­திய அணியின் ஓட்ட எண்­ணிக்கையை விட 122 ஓட்­டங்கள் அதி­க­மாகும். அடுத்து 122 ஓட்­டங்கள் பின்­தங்­கிய இந்­திய அணி 2ஆவது இன்­னிங்ஸை விளை­யா­டி­யது. 

இந்­திய அணி 39.3 ஓவர்­களில் ஒரு விக்­கெட்­ இழப்புக்கு 171 ஓட்­டங்கள் எடுத்­தி­ருந்த போது போதிய வெளிச்சம் இல்­லா­ததால் அத்­துடன் 4ஆவது நாள் ஆட்டம் நிறைவு பெற்­றது. 

இந்­திய அணி அது­வரை 49 ஓட்­டங்கள் முன்­னிலை பெற்­றி­ருந்­தது. நேற்று 5ஆ-வது நாள் ஆட்டம் துவங்­கி­யதும்,  மேற்­கொண்டு 6 ஓட்­டங்கள் மட்­டுமே அடித்த லோகேஷ் ராகுல் 79 ஓட்­

டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். 

இதை­ய­டுத்து களம் புகுந்த விராட் கோஹ்லி தொடக்­கத்­தி­லி­ருந்தே அபார ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தினார். 

மறு­மு­னையில் புஜரா (22), ரஹானே (0), ஜடேஜா (9) அஷ்வின் (7), சஹா (5), புவ­னேஷ்­குமார் (8) ஆகியோர் வரி­சையாக நடையை கட்­டினர்.

சிறப்­பான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­திய கோஹ்லி சத­ம­டித்தார். 

விராட் கோஹ்லி சதம் அடித்ததும் இந்­திய அணி தனது இன்­னிங்ஸை முடித்­துக்­கொண்­டது. அப்­போது 8 விக்­கெட்­டுக்கள் இழப்­புக்கு  இந்­திய அணி 352 ஓட்­டங்­களை எடுத்­தது.  

கோஹ்லி 104 ஓட்­டங்­க­ளு­டனும்,  சமி 12 ஓட்­டங்­க­ளு­டனும் களத்தில் இருந்­தனர். 

இதன்­மூலம் இலங்கை அணிக்கு 231 ஓட்­டங்கள் இலக்கு நிர்­ணை­யிக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை அணி இந்­திய அணியின் பந்­து­வீச்சில் நிலை­கு­லைந்­தது. 

இதனால், சம­நி­லை­யாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி பர­ப­ரப்­பான நிலையை எட்­டி­யது. தோல்­வியை தவிர்க்க இலங்கை அணி போரா­டி­யது. 

இலங்கை வீரர்கள் வரி­சையாக ஒருவர் பின் ஒரு­வ­ராக பெவி­லியன் திரும்­பினர். ஆட்டம் பர­ப­ரப்­பான கட்டத்தை  எட்டிய நிலையில், 26.3 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 75 ஓட்டங்களை இலங்கை அணி எடுத்திருந்த போது, ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. 

இதனால், இந்தப் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது.