சீனாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பெருந்தொகை சிகரெட்டுகளுடன் இரு சீனப் பெண்களை விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த இரு பெண்களும் சீனாவின் ஷங்காய் விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்கவிமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் சட்டவிரோத சிகரெட்டுகளை கொண்டுவந்த போதே நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இரு பெண்களும் 61 வயது மற்றும் 48 வயதான சீனப் பெண்களாவர்.

குறித்த பெண்களிடமிருந்து 3 வகையான 13 ஆயிரத்து 200 சிகரெட்டுகள் அடங்கிய 66 பைக்கற்றுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி 6 இலட்சத்து 66 ஆயிரம் ரூபாவெனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரு சீனப் பெண்களிடமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் விமான நிலைய அதிகாரிகள் இன்று மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.