பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜராகியுள்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில், மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகளுக்கு பதிலளிக்கவே பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

இந்நிலையில் குறித்த மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்றம், கடந்த ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பித்திருந்தது.

குறித்த தினத்தில் ஆஜரான பிரதியமைச்சரை மீண்டும் இன்யை தினம் விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று நீதிமன்றில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளுக்கு

ரஞ்சனை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

நீதிமன்றில் ஆஜரானார் ரஞ்சன் ராமநாயக்க

ரஞ்சனை மீண்டும் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு