சிம்­பாப்வே ஜனா­தி­பதி ரொபேர்ட் முகா­பேயை  பத­வி­யி­லி­ருந்து வெளி­யேற்ற  எவ­ராலும் முடி­யாது என  அவ­ரது மகன் சதுங்கா பெலார்மைன் முகாபே தெரி­வித்­துள்ளார்.

ரொபேர்ட் முகா­பேயின் இரண்­டா­வது மனை­வி­யான கிரேஸின் மூத்த மக­னான சதுங்கா பெலார்மைன் முகாபே  பேஸ்புக் இணை­யத்­தளப் பக்­கத்தில் தன் னால் வெளி­யி­டப்­பட்ட செய்­தி­யி­லேயே இவ்­வாறு  தெரி­வித்­துள்ளார்.

“உங்­களால் இந்­நாட்டு புரட்சித் தலை­வரை பணி நீக்கம் செய்­ய­மு­டி­யாது.  ஜனா­தி­பதி முகாபே இல்­லா­விட்டால்  ஸனு – பி.எப். கட்சி என்­பதே இல்லை”  என சதுங்கா குறிப்­பிட்­டுள்ளார்.

முகா­பேயின் குஷுன்கோ இனத்­துவ குழுவின் பெயரைப் பயன்­ப­டுத்தி அவரை அழைத்த சதுங்கா, “குஷுன்கோ, உங்கள் தொடர்பில் நாங்கள் பெரு­மை­ய­டை­கிறோம். தந்­தையே உங்கள் தொடர்பில் பெரு­மை­ய­டை­கிறோம். குஷுன்கோ எப்­போதும்  வீராதி வீர­ராக நிலைத்­தி­ருப்பார்”  என தெரி­வித்­துள்ளார்.

ரொபேர்ட் முகாபே (93 வயது) நேற்று முன்­தினம் தலை­நகர் ஹரா­ரேயில் ஆற்­றிய உரையின் போது  தனது பதவி விலகல் குறித்து அறி­விப்பார் என பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­பட்ட போதும் அவர் அது குறித்து அறி­விக்­கா­தது  பல­ருக்கும் ஏமாற்­றத்தைத்  தந்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

கடந்த வாரம் சதுங்கா  இன்ஸ்­ரா­கிராம் இணை­யத்­த­ளத்தில் தனது 45,000 ஸ்ரேலிங் பவுண்  பெறு­ம­தி­யான  விலை­யு­யர்ந்த கடி­கா­ரத்தில் தலா 200 ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­யான இரு போத்தல் மது­பா­னத்தை தான் ஊற்­று­வதை வெளிப்­ ப­டுத்தும் கா­ணொளிக் காட்­சியை   வெளி­யிட்டு பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தமை  குறிப்­பி­டத்­தக்கது. தற்­போது சதுங்கா அந்­நாட்டின் கட்­டுப்­பாட்டைக் கைப்­பற்­றிய இரா­ணு­வத்­தி­னரால்  வீட்டுக் காவலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.