இலங்கை –  இந்­திய அணிகள் மோதும் மூன்று போட்­டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்­டி­களின் நேரம் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்கை அணி இந்­தி­யாவில் சுற்றுப் பயணம் மேற்­கொண்டு விளை­யாடி வரு­கி­றது. தற்­போது மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடை­பெற்று வரு­கி­றது. இந்த தொடர் முடிந்­த­வுடன் மூன்று போட்­டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடை­பெ­ற­வுள்­ளது.

ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்­வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி தரம்­சா­லா­விலும், 2ஆ-வது போட்டி டிசம்பர் மாதம் 13ஆம் திகதி மொகா­லி­யிலும் நடைபெறவுள்ளன.

இந்தப் போட்­டிகள் அனைத்தும் பக­லி­ரவு ஆட்டங்கள் என்­பதால் போட்­டிகள் அனைத்தும் பி.ப. 1.30 மணிக்கு தொடங்கும் வகையில் அட்­ட­வணை தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. டிசம்பர் மாதம் இந்­திய வட­மா­நி­லங்­களில் அதிக அளவில் குளிர் நிலவும். இதனைக் காரணம் காட்டி தரம்­சாலா மற்றும் மொகாலி ஆட்­டங்­கள் தொடங்கும் நேரத்தை இந்­திய கிரிக்கெட் சபை மாற்­றி­யுள்­ளது.

முதலில் பி.ப. 1.30 மணி என்­றி­ருந்த தொடக்க நேரத்தை தற்­போது மு.ப. 11.30 மணி­யாக மாற்­றி­யுள்­ளது. மு.ப. 11.30 மணிக்கு போட்டி தொடங்­கினால், இரவு 7.30 மணி­ய­ளவில் முடிந்­து­விடும். குளிர் தாக்கம் அதிகமாக இருக்காது. இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.