லெவன் பிரதர்ஸ் கிரிக்கெட் கழகம் முதன் முறையாக ஏற்பாடு செய்துள்ள அணிக்கு 7 பேர் கொண்ட மென் பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடர் வத்தளை, ஹேகித்த, சாகர விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

32 அணிகள் பங்குகொள்ளும் இச்சுற்றுத்தொடர் நொக் அவுட் அடிப்படையிலான போட்டிகளாக  நடைபெறும் எனவும் போட்டிக்கான விண்ணப்ப படிவங்களை முதலில் சமர்ப்பிக்கும் முதல் 32 அணிகள் மாத்திரமே சுற்றுப்போட்டியில் தெரிவுசெய்யப்படுமென போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

இப்போட்டித் தொடரில் சம்பியனாகும் அணிக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 30,000 ரூபா பணப்பரிசும் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு கிண்ணத்துடன் 15,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்படும். இது தவிர போட்டித் தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்து வீச்சாளர் ஆகிய பரிசுகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலதிக விபரங்களுக்கு ஆர்.துஷாந்த் 0758790800