நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை : அர்ஜுன ரணதுங்க

Published By: Priyatharshan

21 Nov, 2017 | 09:52 AM
image

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றது என்ற பொய் பிரச்சாரம் செய்வது தொடர்பாக குற்றப்புலானாய்வுப் பிரிவுக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க  தெரிவித்தார். 

பொய்ப் பிரச்சாரம் செய்வோர் நீதியின் முன் நிறுத்தப்படுவர் எனவும் அமைச்சர் ரணதுங்க மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் எந்த இடத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. ஆனாலும் சில எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் தாமதத்தினால் எற்பட்டுள்ள எண்ணெய்த் தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்ய பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விரைவான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது பெற்றோல், டீசல், ஜேட் ஏ01 எந்தவித பிரச்சினையும் இன்றி போதியளவு காணப்படுகின்றன. எதிர்வரும் நாட்களில் 3 எரிபொருள் தாங்கிய கப்பல்கள் நாட்டிற்கு வர இருக்கின்றன. இதனால் அநாவசியமான குழப்பங்களுக்கு மக்கள் ஆழாக வேண்டிய தேவையில்லை. ஏதாவது பிரச்சினையென்றால் இது தொடர்பாக நான் அதிகாரிகளுக்கு தொளிவுபடுத்துவேன் மேலும் எரிபொருளை சிக்கனமாக பாவிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பேன். ஆனால் அவ்வாரன பிரச்சினை தற்போது நாட்டில் இல்லை.

சாதாரண நாட்களுக்கு எரிபொருள் கேள்வியானது 2500 தொன். ஆனால் நாங்கள் பெற்றோல் 3500 தொன்-4000தொன்க்கு இடையில் நாங்கள் நாடு பூராகவும் விநியோகித்துள்ளோம். நாங்கள் சில இடங்களுக்கு எண்ணெய் விநியோகித்தாலும் அங்கு எண்ணெய் போதியளவு காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் மறுபக்கத்தில் கேள்விப்படடேன், எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் காணப்பட்டாலும் எண்ணெய் விநியோகிக்கவில்லையென்று. எதிர்காலத்தில் இந்த எரிபொருள் நிலையங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க நேரிடும். மேலும் அவற்றை எமது நிறுவனத்துக்கு கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இன்றும் எண்ணை மாபியா கூட்டம் உள்ளது. எமது அரசாங்கம் வர முன், 10 வருடங்களுக்கு முன்பே ஒரு குழு மட்டுமே எண்ணெய் விநியோகத்தை மேற்கொண்டுள்ளது. அந்த செயற்பாட்டை நிறுத்தி எமது நிறுவனத்துக்கும் நாட்டுக்கும் இலாபம் கிடைக்கும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன். இது தொடர்பாக எனக்கு அச்சமில்லை. எனக்கு சேறு பூசப்படும். ஆனாலும் நாட்டுக்கு நல்லதை மட்டுமே செய்வேன். இதன்போது சிலர் எம்மை மேலேசெல்ல விடமாட்டார்கள். இது தொடர்பாக எதிர்காலத்தில் தீர்மானம் எடுப்பேன். நான் இந்த அமைச்சில் இருப்பது எனக்கு பெரிதல்ல ஆனால் நாட்டுக்கு எது நல்லது அதை செய்வதே எனக்கு பெரிது. எண்ணெய் இருந்தும் என் இவ்வாறு இடம்பெறுகின்றது என்பது எனக்குள் இருக்கும் கேள்வி. எதிர்வரும் காலங்களில் தேர்தல் ஒன்று இடம்பெற போகின்றது. எண்ணெய்த் தட்டுப்பாடு உள்ளது என்று சமூகவலைதளங்களில் சில தகவல்களை சில குழுக்கள் பரவலாக பரப்பி வருகின்றனர். இக்குழுக்களில் அரசியல்வாதிகள் மட்டுமல்ல சில வியாபாரிகளும், அதிகாரிகளும் செயற்படுகின்றனர்.'

தற்போது நாங்கள் எரிபொருள் விநியோகம் தொடர்பாக பல செயற்திட்டங்ளை மேற்கொண்டு வருகின்றோம். குறிப்பாக கப்பலில் கொண்டுவரப்படும் எண்ணெய் தொடர்பான பரிசோதனையை மேற்கொள்ள பதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். ஆகவே கப்பல் வருவதற்கு முன்னதாகவே கப்பலில் உள்ள எண்ணெயை பரிசோதிக்க பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். இது தொடர்பாக அமைச்சரவையில் பேசவுள்ளேன் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11