4000 வருட பழமையான விவாகரத்து

Published By: Digital Desk 7

20 Nov, 2017 | 05:17 PM
image

இந்த காலத்தில் திருமணம் செய்துக்கொள்வதும் பின்னர் விவாகரத்து பெருவதும் சாதாரணமாகிவிட்டது. ஆனால் இந்த விவாகரத்து வழக்கம் 4,000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளது. 

துருக்கியில் அமைந்துள்ள காரன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் திருமண விவாகரத்து பட்டையம் ஒன்றை கண்டறிந்துள்ளனர். 

இது 4,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தம்பதியரின் விவாகரத்து பட்டையம் என கணிக்கப்பட்டுள்ளது. 4,000 ஆண்டுகளுக்கு முன் அசிரியான் பகுதியில் வாழ்ந்த லாகிப்யூம் மற்றும் அவரது மனைவி காடலாவின் விவாகரத்து பட்டையம் இது. 

அந்த பட்டையத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளதாம்,

"கடாலாவிற்கு குழந்தை பிறக்காததால் அவர் தனது கணவருக்கு வேறோரு திருமணம் செய்து வைக்க சம்மதம் வழங்கியுள்ளார்.  எனவே ஒப்பந்தத்தின் படி லகுபியும் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தால், அவர் கடலாவிற்கு வெள்ளி வழங்க வேண்டும். கடாலா விவாகரத்து வழங்கினால் அவர் லகுபியுமிற்கு வெள்ளி வழங்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளதாம்,

முக்கிய செய்திகள்

icon-left
icon-right