மருத்துவ ஆய்வுகூட தொழில் வல்லுநர்களின் வருடாந்த மாநாடு ஜனாதிபதி தலைமையில்...!

Published By: Robert

20 Nov, 2017 | 04:48 PM
image

உலகெங்கிலும் மேற்கொள்ளப்படும் புதிய ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகளுடன் மருத்துவ விஞ்ஞானத்துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கு ஏற்ப, இலங்கை சுகாதாரத்துறையை நவீனமயப்படுத்தி உயர்ந்த தரத்துடன் முன்கொண்டு செல்வதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.  

இதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 இன்று முற்பகல் பத்தரமுல்லையிலுள்ள காட்சு சர்வதேச பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மருத்துவ ஆய்வுகூட தொழில் வல்லுநர்களின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். 

சுகாதாரத் துறையில் மிகவும் முக்கியமான பிரிவான மருத்துவ ஆய்வுகூட சேவையிலுள்ள தொழில் வல்லுநர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தி பட்டப்படிப்புவரை கொண்டுசெல்வதற்குத் தேவையான  வழிகள் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 இலங்கை சுகாதார சேவையின் தரம் காரணமாக சர்வதேசத்தில் எமது நாட்டுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இதற்காக சுகாதாரத்துறையிலுள்ள அனைத்து தொழில் வல்லுனர்களுக்கும் மக்களின் கௌரவம் கிடைக்குமெனக் குறிப்பிட்டார். 

கடந்த காலத்தில் நாடெங்கிலும் டெங்கு நோய் பரவிய சந்தர்ப்பத்தில் இரத்தப் பரிசோதனை சேவையைத் துரிதப்படுத்தி மருத்துவ ஆய்வுகூட தொழில் வல்லுனர்கள் வழங்கிய ஒத்துழைப்பை ஜனாதிபதி பாராட்டினார். 

இலவச சுகாதார சேவையைப் பலப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கேற்ப சுகாதாரத்துறையின் தரத்தையும் நியமங்களையும் மேம்படுத்துவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் நவடிக்கை எடுக்கும் என்றும் ஜனாதிபதி  குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55