பிரான்ஸ் Clichy நகர இஸ்லாமியர்களின் வீதி தொழுகை தடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். 

நவம்பர் 13 தாக்குதலுக்கு பின்னர் Clichy-la-Garenne பகுதியில் உள்ள பள்ளிவாசல் மூடப்பட்டது.

அதைத் தொடர்ந்து அப்பகுதி இஸ்லாமியர்கள் பள்ளிவாசலை திறக்க அனுமதி கோரி, வீதிகளில் தொழுகையை நடத்தி வருகின்றனர்.

அமைதியாக இது இடம்பெற்ற போதும் இது மிகப்பெரும் இடையூறை ஏற்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இஸ்லாமியர்கள் Clichy நகர மண்டபத்தை முற்றுகையிட்டு எதிர் வரும் வெள்ளிக்கிழமை தொழுகை செய்ய திட்டமிட்டிருந்தார்கள்.

இந்நிலையில் பிரான்ஸ் Clichy நகர உள்துறை அமைச்சர் Gérard Collomb நேற்று இது குறித்து கருத்து  தெரிவிக்கும் போது,

'வீதி தொழுகை தடுக்கப்படும். இஸ்லாமியர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் தொழ வேண்டும். வரும் வாரங்களில் இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண்போம்!' என தெரிவித்தார். 

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இவர்கள் வீதிகளில் தொழுகை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.