50 ஆண்டுகளில் 50 அழகிய பெண்களுடன் ‘செக்ஸ்’ உறவு : சுப்ரீம் கோர்ட் நீதிபதி : நூதன பிரசாரம்

Published By: Digital Desk 7

20 Nov, 2017 | 12:44 PM
image

அமெரிக்காவில் உள்ள ஓகியோ மாகாண கவர்னர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி ஓ நெய்ல், 50 பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்துள்ளதாக பேஸ்புக்கில்  தெரிவித்துள்ளார்.

நெய்ல் ஒகியோ மாகாண கவர்னர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆளும் கட்சியான குடியரசு கட்சியின் சார்பில் மேரி டெய்லர் களம் இறங்கயுள்ளார்.

தற்போது பிரசாரம் தீவிரம் அடைந்துள்ள இந் நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளரும், நீதிபதியுமான  நெய்ல் பேஸ்புக்கில் தன்னைப் பற்றிய சுய விமர்சனத்துடன் நூதன பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

"கடந்த 50 ஆண்டுகளில், நான் 50 அழகிய மிகவும் கவர்ச்சிகரமான பெண்களுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்திருக்கிறேன். அவர்களில் யாரையும் குறிப்பாக தெரிவிக்க முடியாது.

தொடக்கத்தில் மிக அழகிய பெண்ணை காதலித்தேன். அதுவே எனது முதல் காதலாகும். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அது பாதியில் முடிந்து விட்டது” என தெரிவித்துள்ளார்.

அவரது அக்கருத்துக்கு இவரை எதிர்த்து போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் மேரி டெய்லர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விமர்சனமும் செய்துள்ளார்.

அமெரிக்காவில் தற்போது பாலியல் குற்றங்கள் பெருகி வருகின்றன. ராணுவத்திலும் இத்தகைய குற்றங்கள் பெருகி வருவதாக தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டுவரை 20,000 பாலியல்  குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் கடற்படையில் 4,788 வழக்குகளும், விமானப்படையில் 8,876 வழக்குகளும் ராணுவத்தில் 3,400 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47