இந்தியாவைச் சேர்ந்த 20 வயதாகும் மானுஷி சில்லர் 2017ஆம் ஆண்டிற்கான 'மிஸ் வேர்ல்ட்"  எனப்படும் உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளார்.

பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பெண் ஒருவர் உலக அழகி பட்டதை வென்றுள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டில் பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டத்தை வென்றார்.

மானுஷி சில்லர்  ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் மருத்துவக் கல்வி பயின்று வருகிறார். இவர் மிஸ் இந்தியா பட்டம் வென்றுள்ளார்.

உலக அழகிப் பட்டத்தை வெல்வதற்கான போட்டியின் கடைசி கேள்வியாக "எந்த பணியில் ஈடுபடுபவருக்கு உலகின் அதிகமான வருமானம் அளிக்க வேண்டும்? எதற்காக அவ்வாறு அளிக்க வேண்டும்?" என்று மானுஷியிடம் கேட்கப்பட்டது 

அதற்கு பதிலளித்த மானுஷி  "என்னுடைய மிகப்பெரிய உத்வேகம் என் தாயார், அம்மாவாக இருப்பதே சிறந்த பணி, ஆனால் அவர்களுக்கு பணமாக இல்லாமல் அன்பு மற்றும் மரியாதையாக நாம் சம்பளத்தை அளிக்க வேண்டும்" என்று நெகிழ்ச்சியான பதிலையளித்துள்ளார்.