இலங்­கையின் 70ஆ-வது ஆண்டு சுதந்­திர தின கொண்­டாட்­டத்தை முன்­னிட்டு இலங்கை கிரிக்கெட் சபை 3 நாடுகள் பங்­கேற்கும் இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரை நடத்த திட்­ட­மிட்­டுள்­ளது. 

இதில் இலங்­கை­யுடன் பங்­க­ளாதேஷ், இந்­தியா ஆகிய அணிகள் மோதுகின்றன. 

இந்தத் தொடர் எதிர்­வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8-ஆம் திகதி முதல் 20ஆ-ம் திகதி வரை கொழும்பு ஆர்.பிரே­ம­தாச மைதா­னத்தில் நடை­பெறும் என இலங்கை கிரிக்கெட் நிறு­வனம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளது. இறுதிப் போட்­டி­யையும் சேர்த்து மொத்தம் 7 போட்­டிகள் நடை­பெ­று­கின்­றன. 

இதன்­படி ஒவ்­வொரு அணியும் மற்ற அணி­க­ளுடன் தலா இரு­முறை நேருக்கு நேர் மோதும். புள்­ளிகள் அடிப்­ப­டையில் முதல் இரு இடங்­களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.