புஞ்சி பொரளை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் பலியாகியுள்ளார்.

40 வயது மதிக்கதக்க நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எனினும் பலியானவர் அடையாளம் மற்றும் சம்பவத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

பொரளை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.