றொபர்ட் முகாபே விரைவில் நாடு கடத்தப்படுவார்?

Published By: Robert

19 Nov, 2017 | 09:38 AM
image

அதி­காரம் பறிக்­கப்­பட்ட சிம்­பாப்வே ஜனா­தி­பதி  றொபர்ட் முகாபே விரைவில் நாடு கடத்­தப்­ப­டுவார். அவ­ரது மனைவி மற்றும் ஊழல் செய்த முக்­கிய அமைச்­சர்கள் கைதா­வார்கள் என தெரி­ய­வந்­துள்­ளது. சிம்­பாப்வே நாட்டின் ஜனா­தி­ப­தி­யான றொபர்ட் முகாபே (93) கடந்த 37 ஆண்­டு­க­ளாக இந்தப் பத­வியில் நீடித்து வந்தார். இந்த நிலையில் சற்றும் எதிர்­பா­ராத வகையில்  சிம்­பாப்­வேயில் திடீ­ரென இரா­ணுவ புரட்சி ஏற்­பட்­டது.

தலை­நகர் ஹரா­ரேயில் களம் இறங்­கிய இரா­ணுவம் ஆட்­சியைக் கைப்­பற்­றி­ய­தாக அறி­வித்­தது. ஜனாதிபதி ரொபர்ட் முகாபே கைது செய்­யப்­பட்டு வீட்டுக் காவலில் சிறை வைக்­கப்­பட்­டுள்ளார்.

இதற்­கி­டையே, முகா­பேக்கும் இரா­ணு­வத்­துக்கும் இடையே சம­ரசப் பேச்சு வார்த்­தையில் மூத்த கிறிஸ்­தவ தேவா­லய தலை­வர்கள் அயல் நாடான தென் ஆபி­ரிக்­காவின் தூதர்கள் ஈடு­பட்­டனர்.

அப்­போது இரா­ணுவ உயரதிகாரிகள் மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் மோர்கன் டஸ்­வாங்­கி­ரையும் முகாபே தனது ஜனா­தி­பதி பத­வியை இரா­ஜி­னாமா செய்ய வேண்டும் என வலி­யு­றுத்­தினர்..

ஆனால் அவர் பதவி விலக மறுத்து விட்டார். அதைத் தொடர்ந்து தற்­போது முகா­பே­யுடன் தென் ஆபி­ரிக்க வளர்ச்சிக் குழுமம் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கி­றது. முகாபே பதவி நீக்கம் செய்­யப்­படும் பட்­சத்தில் அடுத்த ஜனா­தி­ப­தி­யாகும் வாய்ப்பு எ­மர்சன் நங்காக் வாவுக்கு கிடைக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில், அதி­காரம் பறிக்­கப்­பட்ட சிம்­பாப்வே ஜனா­தி­பதி  ரொபர்ட் முகாபே விரைவில் நாடு கடத்­தப்­ப­டுவார். அவ­ரது மனைவி மற்றும் ஊழல் செய்த முக்­கிய அமைச்­சர்கள், உய­ர­தி­கா­ரிகள் கைதா­வார்கள் என தெரி­ய­வந்­துள்­ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07