சடலத்துக்கு நடந்த தலைமாற்று சத்திரசிகிச்சை வெற்றி

Published By: Digital Desk 7

18 Nov, 2017 | 04:26 PM
image

சடலத்துக்கு நடந்த தலைமாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதே தொழில் நுட்பத்துடன் உயிருடன் வாழும் மனிதர்களுக்கு தலை மாற்று சத்திரசிகிச்சை நடத்தமுடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் இத்தாலி சத்திரசிகிச்சை வைத்தியர்கள்.

ரஷ்யாவைச் சேர்ந்த வெலேரி ஸ்பிரிதி நோவ் என்பவருக்கு தலைமாற்று சத்திரசிகிச்சை  நடத்தப்போவதாக இத்தாலியைச் சேர்ந்த டாக்டர் செர்ஜியோ கனோவெரா அறிவித்தார். இதன் மூலம் முதன் முறையாக தலைமாற்று ஆபரேசன் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான சோதனை முயற்சிகளில் கனோவெரா ஈடுபட்டு வந்தார்.

இந் நிலையில் தற்போது ஒரு சடலத்துக்கு தலைமாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. டாக்டர் செர்ஜியோ கனாவெரோ தலைமையிலான குழுவினர் இந்த சத்திரசிகிச்சையை செய்துள்ளனர்.

சுமார் 18 மணி நேரம் இந்த சத்திரசிகிச்சை நடத்தப்பட்ட போது புது விதமான தொழில் நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது. மேலும் தண்டுவடம், நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் அனைத்தும் அதி நவீன தொழில் நுட்பத்துடன் தலையுடன் பொருத்தப்பட்டுள்ளது.

 

இச்சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதே தொழில் நுட்பத்துடன் உயிருடன் வாழும் மனிதர்களுக்கு தலை மாற்று ஆபரேசன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13