காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் சமூக ஊடகமான பேஸ்புக்கில் போலியான தரவுகளை வழங்குதல்  தவறான பிரசாரங்களை பதிவிடுதல் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்துக்கு தகவல் கிடைத்திருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சமூக ஊடகங்களில் இவ்வாறு தவாறான பிரசாரங்களை முன்னெடுப்போர் அல்லது போலி தகவல்களை பேஸ்புக்கில் பதிவிட்டு கலவரங்களை தூண்டுவோரை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் தலைமையலுவலகம் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.