வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 9.30மணியளவில் 2 கிலோ 32 கிராம் கேரள கஞ்சாவுடன் முல்லைத்தீவைச் சேர்ந்த பெண்ணொருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தில் 2 கிலோ 32கிராம் கேரள கஞ்சாவினை பயணப்பொதியில் வைத்து கடத்தி செல்ல முற்பட்ட சமயத்தில் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.