மண்வெட்டியால் தாக்கி நபர் ஒருவரைக் காயப்படுத்தியதா சம்பவம் தொடர்பில் மூவரைக் கைது செய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர். 

crime

மாதம்பை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதம்பை இரட்டிக்குளம் பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மண்வெட்டித் தாக்குதலுக்கு உள்ளான மாதம்பை இரட்டிக் குளம் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.