டென்னிஸ் ஜாம்­பவான் ரோஜர் பெடரர் பரி­சுத்­தொகை மூலம் 720 கோடி ரூபா சம்­பா­தித்து டைகர் வூட்ஸை பின்­னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்­துள்ளார்.

சுவிட்­ஸர்­லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரர் டென்னிஸ் விளை­யாட்டில் ஜாம்­ப­வா­னாக திகழ்ந்து வரு­கிறார். டென்­னிஸின் உய­ரிய தொட­ரான கிராண்ட்ஸ்லாம் பட்­டத்தை 19 முறை கைப்­பற்­றிய ஒரே வீரர் என்ற சாத­னையைப் படைத்­துள்ளார்.

தற்­போது வரை 95 பட்­டங்கள் வென்­றுள்ள பெடரர், பரிசுத் தொகை மூலம் பல­கோடி ரூபா சம்­பா­தித்­துள்ளார்.

உலகில் உள்ள பிர­ப­லங்­களின் வரு­மானம், அவர்­களின் சொத்து மதிப்­பு­களை வெளி­யிடும் போர்ப்ஸ் பத்­தி­ரிகை விளை­யாட்டில் கிடைக்கும் பரிசுத் தொகை மூலம் அதிகம் சம்­பா­தித்­த­வர்கள் பட்­டி­யலை வெளி­யிட்­டது.

இது­வரை உலகின் பணக்­கார விளை­யாட்­டாக கரு­தப்­படும் கோல்ப் விளை­யாட்டின் மன்­ன­னாக கரு­தப்­பட்ட அமெ­ரிக்­காவின் டைகர் வூட்ஸ் முதல் இடத்­தி­லி­ருந்தார். தற்­போது டைகர் வூட்ஸை பின்­னுக்குத் தள்ளி ரோஜர் பெடரர் முதல் இடத்தை பிடித்­துள்ளார்.

ரோஜர் பெடரர் இது­வரை 1800 கோடி ரூபா சம்­பா­தித்து முத­லி­டத்தில் உள்ளார். டைகர் வூட்ஸ் 1700 கோடி ரூபா சம்பாதித்து 2ஆ-வது இடத்தில் உள்ளார்.