உலகின் உய­ர­மான வலைப்­பந்­தாட்ட வீராங்­க­னை­யாக அறி­யப்­படும் இலங்­கையின் தர்­ஜினி சிவ­லிங்கம், அவுஸ்­தி­ரே­லி­யாவில் நடை­பெற்ற வலைப்­பந்­தாட்ட போட்­டி­களில் இரு கழ­கங்கள் சார்­பாக விளை­யாடி தனது திற­மை­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். Falcon மற்றும் CC ஆகிய இரு கழ­கங்கள் சார்­பாக அவர் விளை­யா­டி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. 

இரு கட்­ட­மாக நடை­பெற்ற லீக் போட்­டி­களில் உலகின் 20இற்கும் அதி­க­மான அணி­க­ளுடன் விளை­யா­டி­யி­ருந்தார். போட்டித் தொட­ரி­லி­ருந்து வெளி­யேறும் நிலை வரை அணிகள் விறு­வி­றுப்­பாக தமது திற­மை­களை வெளிப்­ப­டுத்தி போட்­டி­யிட்­டி­ருந்­தன. விக்­டோ­ரியா வலைப்­பந்­தாட்ட லீக் போட்­டி­களில் Falcon அணிக்கு தலைமை வகித்­தி­ருந்த தர்­ஜினி, 20 போட்­டி­களில் 823 புள்­ளி­களை பெற்­றி­ருந்தார். இதில் சூட்டிங் சத­வீ­த­மாக 92ஐ பதிவு செய்­தி­ருந்தார். 

தொடர்ந்து சிறப்­பாக விளை­யா­டிய தர்­ஜினி, Falcon கழ­கத்தை இறு­திப்­போட்டி வரை வழி­ந­டத்­தி­யி­ருந்தார். இந்த லீக் போட்­டி­ களில் சிறப்பாக ஆடியிருந்த தர்­ஜினி ஆண்டின் சிறந்த சூட்டர் மற்றும் நேர்மையான வீராங்கனை விருதுகளை வென்றார்.