குரு­நாகல், பொல்­பித்­தி­கம பகு­தி திரு­மண வீடொன்றில் இரு சாராருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தாக்கம் கைகலப்பாக மாறிய நிலையில் அதனை தடுக்க வந்த பெண்­ணொ­ருவர் பொல்லால் தாக்­கப்­பட்டு உயி­ரி­ழந்­துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது. இந்த சம்­பவத்தில் மேலும் நால்வர் காய­ம­டைந்­துள்­ளனர். 

இச்­சம்­ப­வ­மா­னது குரு­நாகல் பொல்­பித்­தி­கம பகு­தி வீடொன்றில் கடந்த 15 புதன்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வத்தில்  மடா­பெய பொடு­வில, பொல்­பித்­தி­க­மவைச் சேர்ந்த 58 வய­தான பிரே­மா­வதி என்பவரே உயிரிழந்தவராவார்.

இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, 

திரு­மண வீட்டில் சக­ஜ­மான உரை­யா­டல்கள் நிகழும் வேளையில் அங்கு ஒரு­வரின் கூற்று நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அதனை தொடர்ந்து அந்த நபரும் இன்­னு­மொ­ரு­வரும் தமது கருத்­துக்­களை ஆவே­ச­மாக பரி­மாறிக் கொண்­டுள்­ளனர். இதன் போது இரு­வ­ருக்குள் ஏற்­பட்ட வாய்த்­தர்க்கம் கை­க­லப்­பாக மாறி­யுள்­ளது. 

 சம்­ப­வத்தை தொடர்ந்து இரு­வ­ரையும் ஒரு சுமுக நிலைக்கு கொண்­டு­வர முயற்­சித்த வேளை­யி­லேயே மர­ண­ம­டைந்­துள்ள குறித்த பெண் வாய்த் தர்க்­கத்தில் ஈடு­பட்ட ஒரு­வ­ரினால் பொல்லால் தாக்­கப்­பட்டுள்ளார். தாக்­கப்­பட்ட குறித்த பெண் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்ளார். 

சம்­ப­வத்தில் காயங்­க­ளுக்­குள்­ளான நால்­வரில் இருவர் சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வீடு ­தி­ரும்­பி­யுள்ள நிலையில் இன்னும் இருவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.