படை­வ­ழங்கும் நாடுகள் போலித்­த­ன­மான விசா­ர­ணைகள் மேற்­கொள்வ­தனை அனு ­ம­திப்­பதை விடுத்து பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் உரி­மை­களை கையி­லெ­டுக்க வேண்டும். அதற்கு இதுவே சரி­யான தருணம்  என உண்மை மற்றும் நீதிக்­கான சர்­வ­தேச செயற்­றிட்­டத்தின்  நிறை­வேற்றுப் பணிப்­பாளர் ஜஸ்மின் சூக்கா தெரி­வித்­துள்ளார். 

பாது­காப்பு படை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகக் கூறப்­படும் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள் மற்றும் சித்­தி­ர­வ­தைகள் குறித்த அண்­மைய 50 சம்­ப­வங்­களின் விசா­ரணை முடி­வுகள் பற்­றியும் முழு­மை­யான விப­ரங்­களை வெளியி­டு­மாறு இலங்­கைக்கு சவால் விடுக்­கப்­ப­ட­வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். 

வன்­கூ­வரில் நடை­பெற்ற ஐ.நா. அமை­தி­காக்கும் மாநாட்டில் உரை­யாற்­றிய இலங்கை யின் பாது­காப்புச் செயலர் கபில வைத்­தி­ய­ரட்ண, அசோ­சி­யேட்டட் பிரஸ் ஊட­கத்­திற்கு கருத்துத் தெரி­விக்­கையில், பாது­ காப்பு படை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகவும் தொடர்ந்தும் நடை­பெற்­று ­வ­ரு­வ­தாகவும் கூறப்­படும் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள் மற்றும் சித்­தி­ர­வ­தைகள் குறித்த அண்­மைய 50 சம்­ப­வங்­களும் அடிப்­ப­டை­யற்­றவை எனவும் ஆதா­ர­மற்­றவை எனவும் தெரி­வித்­தி­ருந்தார். 

இந்த எல்லா சம்­ப­வங்கள் தொடர்­பிலும் இலங்கை விசா­ர­ணை­களை மேற்­கொண்­டது என்றும் அவர் தெரி­வித்தார். மேலும் இவ்­வாறு மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணைகள் முடிவு பெற்று மூடப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

இதற்கு பதி­ல­ளிக்கும் வித­மாக உண்மை மற்றும் நீதிக்­கான சர்­வ­தேச செயற்­றிட்டம் வெளியிட்­டுள்ள அறிக்­கையில் அதன் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் ஜஸ்மின் சுக்கா கூறு­கையில்,

இந்தச் சம்­ப­வங்கள் குறித்து தான் மேற்­கொண்­ட­தாகக் கூறும் விசா­ர­ணைகள் பற்­றியும் அந்த விசா­ர­ணை­களின் முடி­வுகள் பற்­றியும் முழு­மை­யான விப­ரங்­களை வெளியி­டு­மாறு இலங்கை அர­சாங்­கத்­திற்கு சவால் விடுக்­கப்­ப­ட­ வேண்டும். அத்­துடன் இந்த தக­வல்கள் அனைத்தும் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன் அவை ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யா­ள­ருக்கும் கிடைக்க வழி­வகை செய்­யப்­ப­ட­வேண்டும்.

குறிப்­பாக முறை­யிட்­ட­வர்கள் யாரென்றே தெரி­யாத நிலையில் 50 சிக்­க­லான சம்­ப­வங்­களை ஒரு வாரத்­திற்கும் குறை­வான காலத்தில் விசா­ரிப்­ப­தென்­பது மனித சக்­திக்கு சாத்­தி­ய­மற்­றது.  மிகச் ­ச­ரி­யாக கூறு­வ­தென்றால், நீதிச் செயல்­மு­றையை நோக்­கிய இவ்­வா­றான பொறுப்­பற்ற அணு­கு­ மு­றை­யா­னது இலங்­கையில் எந்த ஒரு உள்­நாட்டு செயல்­மு­றை­யையும் வெளிப்­ப­டை­யா­கவே நம்­ப­மு­டி­யாது என்­பதால் அதனை மறு­த­லிக்­கின்ற நிலைக்கே பாதிக்­கப்­பட்­ட­வர்­களை கொண்டு சென்­றுள்­ளது. 

ஆண் பாலியல் வன்­மு­றையால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பி­லான இந்த குறிப்­பிட்ட இவ் ­வ­ழக்­கினை நிச்­ச­ய­மாக தனது சொந்த சாட்­சி­யாளர் பாது­காப்பு அமைப்­பிலே விசா­ரிப்­பது குற்­ற­வா­ளி­களை கொண்­டதும் குற்றஞ் செய்­த­வர்­களே தங்­களைத் தாங்கள் விசா­ரணை செய்­வ­தாக அமையும் இலங்கை அர­சாங்கம் அல்­லாத ஆண் பாலியல் வன்­முறை பற்­றிய அனு­பவம் கொண்ட சுயா­தீ­ன­மான ஒரு சர்­வ­தேச அமைப்பு மட்­டுமே விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும்.

பாது­காப்புச் செய­லா­ளரின் கூற்­றா­னது, இலங்கை அரசு தான் அனுப்­பிய அமை­தி­காப்­பா­ளர்­களால் கெயிட்­டியில் நிகழ்த்­தப்­பட்ட பாலியல் வன்­பு­ணர்வு பற்­றிய குற்­றச்­சாட்­டுகள் மீது எத்­த­கைய விசா­ர­ணை­களை மேற்­கொண்­டது என்­பது பற்­றிய கேள்­வி­யையே எழுப்­பு­கி­றது. 

2013 ஆம் ஆண்டு குற்­றச்­சாட்­டுகள் பற்றி விசா­ர­ணை­களை மேற்­கொள்ள அனுப்­பப்­பட்ட இலங்­கையின் மேஜர் ஜெனரல், பாதிக்கப்பட்ட பெண்ணை பரி­சோ­தித்த மருத்­துவ அதி­கா­ரி­க­ளையோ அல்­லது முறைப்­பாடு செய்­த­வ­ரையோ நேர­டி­யாக விசா­ரிக்­க­வில்லை .

ஆனால் அவர் தனது படைச்­சிப்­பாயை குற்­றத்­தி­லி­ருந்து விடு­வித்­து­விட்­ட­தா­கவும்  அவரே (அசோ­சி­யேட்டட் பிர­ஸிடம்) ஒத்­து­கொண்­டுள்ளார். இல ங்கை அரசு இவ்­வா­றான விசா­ர­ணை­க­ளைத்தான் ஒரு வாரத்­திற்கும் குறை­வான காலத்தில் அந்த 50 சம்­ப­வங்கள் மீதும் மேற்­கொண்­டதா?

2004 மற்றும் 2007 இற்கு இடை­யி­லான காலப்­ப­கு­தியில் 134 இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ரான சிறு­வர்கள் மீதான பாலியல் வன்­மு­றைகள் தொடர்பில், ஐ.நா வால் கண்­ட­றி­யப்­பட்ட அடிப்­படை ஆதா­ரங்கள் இருப்­பினும் அரசு எந்­த­வொரு குற்­ற­வா­ளி­யையும் கைது செய்து சிறை­யி­ல­டைக்க தவ­றி­ விட்­டது.

இலங்கை மேலும் தனது அமை­தி­காப்­பா­ளர்­களை வெளிநா­டு­க­ளுக்கு அனுப்­பி­வைப்­ப­தற்கு முன்னர் தனது பாதுகாப்பு படையினரை அவர்கள் செய்த குற்றங்களிலிருந்து வழமையாக விடுதலை செய்யும் அவர்களது இந்த அனைத்து விசாரணைகள் பற்றியும் கடுமையான வினாக்கள் கேட்கப்படவேண்டும். 

ஐக்கிய நாடுகள் அவை பூச்சியம் சகிப்புத்தன்மை என்பதற்கு அர்த்தம் ஒன்று உள்ளது என்பதனை உறுதிசெய்ய விரும்பினால், படைவழங்கும் நாடுகள் போலித்தனமான விசாரணைகள் மேற் கொள்வதனை அனுமதிப்பதை விடுத்து பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை கையிலெடுக்க வேண்டும். அதற்கு இதுவே சரியான தருணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.