வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் தேசிய கொடியை ஏற்­று­வ­தற்கு எதிர்ப்பு வெளி­யிட்­டுள்ளார். இது ஊட­கங்­களில் வெளி­யா­கி­யுள்­ளது. அத்­துடன் அம்­மா­கா­ணத்தின் முத­ல­மைச்சர் சி.விக்­கி­னேஸ்­வரன் தொடர்ந்து மக்­களை கொதிப்­ப­டையச் செய்யும் வகையில் கருத்­து­களை தொடர்ந்து தெரி­வித்து வரு­கின்றார். இந்­ நி­லையில் எப்­படி நாம் ஜனா­தி­ப­தி­யி­னதும் ஆளு­நரின் அதி­கா­ரத்தை குறைப்­பது என துறை­முக மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க சபையில் கேள்வி எழுப்­பினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற  2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத் ­திட்­டத்தில் ஜனா­தி­பதி, பிர­தமர், ஆணைக்­கு­ழுக்கள், திணைக்­க­ளங்கள் ஆகி­ய­வற்­றுக்­கான ஒதுக்­கீ­டுகள் மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

வர­லாற்றில் முதற் ­த­ட­வை­யாக ஜனா­தி­பதி ஒருவர் தன்­னிடம் உள்ள அதி­யுச்ச அதி­கா­ரத்தை பாரா­ளு­மன்­றத்­திற்கு வழங்­கி­யமை இதுவே முதற்தடவையாகும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேனவே அவ்வாறு செய்துள்ளார். 

எனவே இது பாராட்­டத் ­தக்க விட­ய­மாகும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அனைத்து இனத்­த­வர்­களின் பிரச்­சி­னை­களை இனங்­கண்ட தலை­வ­ராவார். எனினும் அவர் தொடர்ந்து முப்­ப­டை­யிரை பாது­காப்­ப­தாக கூறி வரு­கின்றார்.  முப்­ப­டை­யினர் விட­யத்தில் அவ­ரது நிலைப்­பாட்டில் உறு­தி­யாக உள்ளார். 

இதன்­படி  இலங்­கைக்கு சார்­பாக கருத்து தெரி­வித்த  பிரிட்­டனின் லோட் நெஸ்­பிக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாராட்டி கடிதம் அனுப்­பி­யுள்ளார். இறுதி யுத்தத்தின் போது 40 ஆயிரம் பேர் கொல்­லப்­ப­ட­வில்லை. ஐந்­தா­யிரம் பேர­ள­வி­லேயே கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக அவர் கூறி­யுள்ளார். இதன்­படி அதற்கு ஜனா­தி­பதி கடிதம் மூலம் நன்றி தெரி­வித்­துள்ளார். இவ்­வாறு கடிதம் அனுப்­பு­மாறு யாரும் அவ­ருக்கு ஆலோ­சனை விடுக்­க­வில்லை. இந்த கடிதம் ஏற்­க­னவே அனுப்­பி­வைக்­கப்­பட்­டாலும் இன்று (நேற்று) பத்­தி­ரி­கையில் வெளி­யா­னது. 

எனினும் ஜனா­தி­பதி ஏனைய இனத்­த­வர்­களின் குறை­பா­டு­களை மறந்து செயற்­ப­ட­வில்லை. அனைத்து இனத்­த­வர்­க­ளுடன் சம­மாக செயற்­பட்டு வரு­கின்றார். அவர் இன­வாதி அல்ல. 

அத்­துடன் மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பாக ஆணைக்­குழு அமைக்­கப்­பட்ட போது இது மோச­டியை மூடி­ம­றைக்கும் செயற்­பாடு என கூறினர். ஆனால் தற்­போது பல்­வேறு விட­யங்கள் ஒவ்­வொரு நாளும் வெளி­வந்­த­முள்­ளன. எனவே ஜனா­தி­ப­தியின்  செயற்­பா­டுகள் நீதி­யா­னதும் நேர்­மை­யா­ன­து­மாகும். அவர் நோபல் பரி­சுக்கும் பரிந்­து­ரைக்­கப்­பட்டார். இதற்­காக நாம் பெரு­மைப்­பட வேண்டும். 

இந்­நி­லையில் வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் தேசிய கொடியை ஏற்­று­வ­தற்கு எதிர்ப்பு வெளி­யிட்­டுள்ளார். இந்த விடயம் ஊட­கங்­களில் வெளி­யா­கி­யுள்­ளன. அத்துடன் அம்மாகாணத்தின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மக்களை கொதிப்படைய செய்யும் வகையில் கருத்துகள் தெரிவிக்கும் நிலையில் எப்படி நாம் ஜனாதிபதியினதும் ஆளுனரதும் அதிகாரத்தை குறைப்பது? எனவே ஜனாதிபதி முறைமை தொடர்ந்து இருக்க வேண்டும். அதுவே நாட்டுக்கு நல்லது என்றார் .