அலோ­ஸி­ய­ஸுடன் எம்.பி.க்கள் உரை­யா­டிய விப­ரங்­களை சபையில் வெளி­யிட வேண்டும்

Published By: Priyatharshan

18 Nov, 2017 | 10:31 AM
image

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்பில் கோப்­குழு விசா­ரித்த போது ஆளும் கட்சி எம். பிக்கள் சிலர் கணக்­காய்­வா­ளரை தூற் றினர். எனினும் இவர்கள் அனை­வரும் தொலை­பே­சியின் ஊடாக அர்­ஜுன அலோ­சி­யஸின் ஆலோ­ச­னைக்கு அமை­வா­கவே செயற்­பட்­டுள்­ளனர் என்­பது தற்­போ­துதான் எமக்கு விளங்­கு­கின்­றது.

எனவே இவர்கள் அர்­ஜுன அலோ­சி­ய­ஸுடன் தொலை­பே­சிய உரை­யா­டி­ய­வற்றை உடன் சபைக்கு ஆற்­றுப்­ப­டுத்தி ஹன்சாட் அறிக்­கையில் உள்­ள­டக்க வேண்டும். இதற்கு சபா­நா­யகர் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என கோப்­கு­ழுவின் தலை­வரும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுனில் ஹந்­துன்­நெத்தி சபையில் கோரிக்கை விடுத்தார்.

கோப்­குழு விசா­ர­ணையின் போது  எம்.பி.க்கள் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுடன்  தொலைபேசியில் உரை­யாடி இருந்தால் அது பாரிய தவறாகும். அத்­துடன் கோப்­கு­ழு­விற்கு பாரிய சதித்­திட்டம் இருந்த நிலையில் மத்­திய வங்கி மோசடி தொடர்­பான கோப் குழுவின் அறிக்­கையை சமர்ப்­பிக்க முடிந்­த­மை­யினை நினைத்து நான் பெருமை அடை­கின்றேன் என்றும் அவர்  குறிப்­பிட்டார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற  2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத் ­திட்­டத்தில் ஜனா­தி­பதி, பிர­தமர், எதிர்க்­கட்சி தலைவர், பாரா­ளு­மன்றம், ஆணைக்­கு­ழுக்கள், திணைக்­க­ளங்கள் ஆகி­ய­வற்­றுக்­கான ஒதுக்­கீ­டுகள் மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

தற்­போது நல்­லாட்சி அர­சாங்­கத்தில் நல்­லாட்சி என்ற முத்­திரை கிழித்­தெ­றியப்­பட்­டுள்­ளது. இனிமேல் நல்­லாட்சி என்று கூறிக்­கொள்ள முடி­யாது. இதன்­படி நேற்­றைய தினம் (நேற்று முன் தினம்) கோப்­குழு உறுப்­பி­னர்கள் சிலரின் தொலை­பேசி உரை­யாடல் இர­க­சி­யத்தை பிணை­முறி தொடர்­பான விசா­ரணை ஆணைக்­குழு வெளி­யிட்­டுள்­ளது. எனவே கோப்­குழு உறுப்­பி­னர்கள் இப்­படி நடந்து கொண்­டி­ருந்தால் அது பிழை­யான விட­ய­மாகும். கோப்­கு­ழுவின் உறுப்­பி­னர்­களின் இவ்­வா­றான செயற்­பாட்டை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

பிணை­முறி தொடர்­பான கோப்­குழு விசா­ரணை செய்த போது தொலை­பே­சியில் உரை­யாடிய­தாக கூறப்­படும் ஐந்து பேர் அப்­போது கணக்­காய்­வாளர் நாய­கத்­திற்கு எதி­ராக செயற்­பட்­டனர். பிணை­முறி தொடர்­பாக கணக்­காய்­வாளர் நாயகம் அறிக்கை முன்­வைக்­கப்­பட்ட நேரத்தில் குறித்த ஐந்து பேரும் கணக்­காய்­வா­ள­ருக்கு இவ்­வாறு செயற்­ப­டு­வ­தற்கு அதி­காரம் இல்லை. கணக்­காய்­வாளர் நாய­கத்­திற்கு கண்­ட­படி செயற்­பட முடி­யாது என வா­திட்­டனர். எனினும் இவர்கள் யாரு­டைய கோரிக்கை பிர­காரம் செயற்­பட்­டனர் என்­பது தற்­போ­துதான் தெரி­கின்­றது.   

இதன்­படி பிணை­முறி மோச­டியின் பிர­தான சந்­தேக நப­ரான பேப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறு­வ­னத்தின் பிர­தானி அர்­ஜூன அலோ­சி­யஸின் ஆலோ­ச­னைக்கு அமை­யவே கணக்­காய்­வா­ள­ருக்கு எதி­ராகப் பேசி­யுள்­ளனர். சாதா­ர­ண­மாக மத்­திய வங்கி அதி­கா­ரி­க­ளுடன் பேசி ஆலோ­சனை பெற்று பேசி­னாலும் பர­வா­யில்லை. எனினும் மோச­டியின் பிர­தான சந்­தேக நப­ரி­டமே பேசி­யுள்­ளனர். 

எனவே  மத்­திய வங்கி மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை மாத்­தி­ர­மல்ல. தற்­போது வெளி­யா­கி­யுள்ள ஐந்து பேரின் தொலை­பேசி உரை­யாட‍லை சபைக்கு ஆற்­றுப்­ப­டுத்த வேண்டும். ஏனெனில் கோப்­குழு விசா­ரணை நடக்கும் போது தொலை­பே­சியில் பிர­தான சந்­தேக நப­ருடன் பேசி­யி­ருந்தால் அது தார்­மீக பொறுப்­புக்கு மாற்­ற­மா­னது. அர்­ஜுன அலோ­சியஸ் என்ன மத்­திய வங்­கியா? இல்லை. இவரே மோச­டியின் பிர­தா­ன­மா­ன­வ­ராகும். ஆகவே தொலை­பேசி உரை­யா­டலில் என்னபேசி­னார்கள் என்­ப­தனை மக்கள் அறிய வேண்டும். இதற்­காக சபைக்கு ஆற்­றுப்­ப­டுத்தி ஹன்சாட் அறிக்­கையில் உள்­ள­டக்க வேண்டும். மத்­திய வங்கி மோசடி தொடர்­பான கோப்­கு­ழுவில் இவ்­வ­ளவு பாரிய சதித்­திட்டம் இருந்தும் இது குறித்த அறிக்கை சமர்ப்­பித்­தமைக்காக தலைவர் என்ற வகையில் பெருமை அடை­வ­துடன் அது வெற்­றி­யாகும். 

அத்­துடன் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தச்­ சட்­டத்தின் படி  ஆணைக்­குழு நிறு­வப்­பட்­ட­துடன் அது பல­மாக இருக்கும் என்றே நினைத்தோம். எனினும் நல்­லாட்­சியில் பல­மாக்க வேண்­டிய நிறு­வ­னங்­களைவலு­வி­ழக்க செய்­துள்­ளீர்கள். குறிப்­பாக  கணக்­காய்வு ஆணைக்­குழு போன்ற சில ஆணைக்­கு­ழு­விற்கு எந்­த­வொரு பலமும் இல்­லாமல் உள்­ளது. கணக்­காய்வு சட்­ட­மூ­லத்­திற்கு அமைச்­ச­ரவை ஏன் அச்சம் கொள்­கின்­றது. எந்த நோக்­கத்­திற்கு கணக்­காய்வு சட்­ட­மூ­லத்தை முடக்­கு­கின்­றனர். உரிய அதி­காரம் வழங்­கா­ விட்டால் கணக்­காய்வு ஆணைக்­கு­ழுவை மூட வேண்டும். ஏனெனில் இந்த ஆணைக்­கு­ழு­வினை நடத்தி செல்­வ­தற்கு 20 இலட்சம் ரூபா செல­வி­டப்­ப­டு­கின்­றது.இதனால் அவர் கூட சிக்­கலாம். கணக்­காய்வு சட்­ட­மூலம் இல்லை என்றால் ஆணைக்­கு­ழு­வினை மூடி­வி­டுங்கள்.

அத்­துடன்தற்­போ­தைக்கு ஆணைக்­கு­ழுக்கள் பெய­ர­ள­வி­லேயே உள்­ளன. மேலும் பாரா­ளு­ மன்­றத்­தையும் நாம் மேலும் பலப்­ப­டுத்த வேண்டும். பொலிஸ் ஆணைக்குழு வின் செயற்பாட்டை பொறுத்தவரை உயர் பதவி வழங்குவதில் சிக்கல்கள் உள்ளன. அரச ஊழியர் களின் பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவைகள் மந்தகதியில் உள்ளன. அரசிய லமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்கு ஆத ரவளித்தது அரச சேவையை  சுயாதீனமா க்கவேயாகும்.  எனவே உரிய சேவை களை ஆணைக்குழுக்கள்   செய்ய வேண்டும். எப்போது கணக்காய்வு சட்டமூலம் கொண்டு வரப்படும் என்பதனை அரசாங் கம் அறிவிக்க வேண்டும். நாணய ஒழுக்கவி யலை ஏற்படுத்துவதாயின் கணக்காய்வு சட்டமூலம் அவசியமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55