புதிய அர­சியல் யாப்பு முயற்­சியை குழப்­பி­ய­வர்­க­ளாக நாம் இருக்கக் கூடாது. இத­னால்தான் நம்­பிக்­கை­யுடன் இந்த முயற்­சியில் பய­ணிக்­கின்றோம். மாற்றுத் தரப்­பி­னரால்  இந்த முயற்சி தோல்­வி­ய­டைந்தால் எமது நியாயத் தன்­மையை சர்­வ­தேச சமூகம் ஏற்­றுக்­கொள்ளும். அதன் மூலம் மாற்­றுத்­தீர்­வுக்கு வழி­பி­றக்கும் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் தெரி­வித்தார். 

சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரனை நாங்கள்  வெளி­யேறச் சொல்­ல­வில்லை. நாம் ஒற்­று­மை­யாக இருக்­க­வேண்டும். ஒற்­று­மை­யாக இருந்து புதிய அர­சியல் யாப்பு முயற்­சியை முன்­னெ­டுக்க வேண்டும். இதன் மூலம் உறு­தி­யான தீர்வை காண­வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். 

வடக்கு கிழக்கு இணைப்­பென்­பது தற்­போ­தைய நிலையில் சிக்­க­லான விட­ய­மாக இருக்கும். வடக்கு கிழக்கு இணைப்பை மேற்­கொள்­வ­தற்கு இணங்கும் நிலை தற்­போது இல்லை. முஸ்லிம் மக்­க­ளுடன் பேசி இணக்­கத்­துக்கு வந்தால் அது சாத்­தி­ய­மா­கும். ஆனால் தற்­போ­தைய நிலையில் அது கடி­ன­மான விட­ய­மாகும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார். 

தமிழ் பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்­களை நேற்று முன்­தினம் மாலை கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் சந்­தித்துப் பேசினார். இந்தச் சந்­திப்பில் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா, பேச்­சாளர் எம்.ஏ. சுமந்­திரன், ரெலோ கட்­சியின் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன், புௌாட் அமைப்­பின்­த­லைவர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் ஆகி­யோரும் கலந்­து­கொண்­டனர். இங்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே சம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

இங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது,

அர­சியல் தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­சியல் யாப்­புக்கு பாரா­ளு­மன்­றத்தில் மூன்­றி­ லி­ரண்டு பெரும்­பான்­மையை பெற்று அதனை சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் வெற்­றி­கொள்ள முடியும் என்ற நம்­பிக்கை எம்­மி­ட­முள்­ளது. இந்த சந்­தர்ப்­பத்தை நாம் முழு­மை­யாக பயன்­ப­டுத்த வேண்டும். இந்த முயற்­சியின் இறு­தியில் என்ன வருமோ தெரி­யாது. இறுதி வடிவம் எமக்கு திருப்­தி­ய­ளித்தால் அதனை மக்­க­ளிடம் கொண்­டு­சென்று அவர்­களின் கருத்­துக்­களைப் பெற்று தீர்­மா­ன­மெ­டுப்போம்.

ஒரு வரு­டத்­துக்கு முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ்  அர­சியல் யாப்­புக்­கான வழி­ந­டத்தல் குழு­வி­லி­ருந்து எம்மை வெளி­யே­று­மாறு அறிக்கை விட்­டது. வழி­ந­டத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் நானும் சுமந்­தி­ரனும் வெளி­யேற வேண்­டு­மென்று கோரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. 

இந்த அறிக்கை விடு­வ­தற்கு முன்னர் எம்­முடன் எந்­த­வித கலந்­தா­லோ­ச­னையும் நடத்­தப்­ப­ட­வில்லை. இதனால் இந்தக் கோரிக்­கை­யினை நாம் ஏற்­கவில்லை. இதற்கு பதி­ல­ளிக்­க­வு­மில்லை. இதன்­கா­ர­ண­மாக தற்­போது அவர்கள் விலகி நிற்­கின்­றார்கள். இதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அவர்­க­ளுக்­காக எமது செயற்­பா­டு­களை கைவி­ட­மு­டி­யாது.

தற்­போ­தைய நிலையில் சமஷ்டி என்ற சொல் நாட்டில் ஏற்­றுக்­கொள்ளகூ­டிய விட­ய­மல்ல. இறுதி அறிக்­கை­யிலும் சமஷ்டி என்ற சொல் வரு­மென்று எதிர்­பார்­க்க­வில்லை. அதி­யுச்ச விசு­வா­ச­மான அதி­காரப் பகிர்வு கிடைக்­கு­மென்ற நம்­பிக்கை எமக்­குள்­ளது. சமஷ்டி என்ற பெயரைப்  பயன்­ப­டுத்­தாமல் சர்­வ­தே­சத்தில் பல நாடு­களில் அதி­காரம் பர­வ­லாக்­கப்­பட்­டுள்­ளது. 

புதிய அர­சியல் யாப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையில் தேசிய, மாகாண, உள்­ளூ­ராட்சி மட்­டங்­களில் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்­டுள்­ளது. மாகா­ணத்தின் அதி­கா­ரங்­களை மத்தி பயன்­ப­டுத்த முடி­யாத நிலை காணப்­ப­டு­கி­றது. இதன் மூலம் உள்­ளக சுய­நிர்­ணய உரிமை உரு­வா­கின்­றது. 

தற்­போ­தைய நிலையில் வடக்கு கிழக்கு இணைப்பு என்­பது சிக்­க­லான விட­ய­மாகும். இதற்­கான இணக்கம் ஏற்­படும் நிலை தற்­போது இல்லை. முஸ்லிம் மக்­க­ளுடன் பேசி இணக்­கத்­துக்கு வந்தால் அவர்­க­ளுக்கு தனி அலகை வழங்­கவும் முடியும். ஆனால் அதற்­கான நிலைமை தற்­போது கடி­ன­மாக உள்­ளது. 

ஆனாலும் வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரத்தை நான் கைவிடவில்லை. நாம் சுரேஷ் பிரேமச்சந்திரனை வெளியே போகச் சொல்லவில்லை. நாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும். புதிய அரசியல் யாப்புக்கான முயற்சியானது எம்மால் தோல்விய டைந்ததாக இருக்கக்கூடாது. மாற்றுத் தரப்பினரால் தோல்வியடைந்ததாக இருக்க வேண்டும். அப்படி தோல்வியடைந்தால் சர்வதேச சமூகம் எமது நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளும். இதன் மூலம் மாற்றுவழி பிறக்கும்.