கூட்டு  எதிர்க்­கட்­சி­யுடன் இணைந்து செயற்­ப­டு­வது  தொடர்பில்  சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி  இது­வரை எவ்­வி­த­மான  பேச்­சு­வார்த்­தை­க­ளையும் நடத்­த­வில்லை. அவ்­வாறு  நடத்­து­வ­தற்­கான சூழல் அமை­ய­வில்லை என்று சுதந்­திரக் கட்­சியின் ஊட­க­ப்பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான  டிலான் பெரேரா தெரி­வித்தார். 

கிராம மட்ட மக்கள்  இரண்டு தரப்பும்  இணை­ய­வேண்டும் என்று விரும்­பலாம்.  ஆனால், அதற்கு  தலை­வர்கள்  பேச்­சு­வார்த்தை நடத்­த­வில்­லையே என்றும் அவர் குறிப்­பிட்டார். 

மஹிந்த மற்றும் மைத்­திரி தரப்­புக்­களை  இணைக்கும் முயற்­சிகள் இடம்­பெ­று­வ­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கின்­றமை குறித்து   வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

டிலான் பெரெரா இது  தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்,

கூட்டு  எதிர்க்­கட்­சி­யுடன்   சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி இது­வரை பேச்­சு­வார்த்தை நடத்­த­வில்லை. அதா­வது  கூட்டு எதிர்க்­கட்­சி­யுடன்  இணை­வது  தொடர்பில்  இது­வரை எவ்­வி­த­மான பேச்­சுக்­களும் நடை­பெ­ற­வில்லை. 

ஆனால் ஊட­கங்கள்  இது தொடர்பில்  செய்­தி­களை வெ ளியி­டு­கின்­றன. அதா­வது  சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும்  கூட்டு எதி­ர­ணியும்  இணைந்­து­கொள்­ளப்­போ­வ­தா­கவும்  அதற்­கான  பேச்­சு­வார்த்­தைகள்  இடம்­பெ­று­வ­தா­கவும்  ஊட­கங்கள் தெரி­வித்­து­வ­ரு­கின்­றன.  

ஆனால் அவ்­வாறு   எந்தப் பேச்­சு­வார்த்­தை­களும்   இடம்­பெ­ற­வில்லை.  கட்­சியின் ஊடக பேச்­சாளர்  என்ற வகையில் நான் கூறு­கின்றேன். கட்­சியின் ஊடக பேச்­சாளர் என்ற வகையில் எனக்கு  தெரி­யாமல்  இவ்­வாறு பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெ­று­வ­தற்கு  சாத்­தியம் குறை­வாகும்.  

எனக்கு தெரிந்த வகையில்  பேச்­சு­வார்த்­தை­களும்  இரண்டு தரப்­புக்கும் இடையில் நடை­பெ­ற­வில்லை என்றார். 

கேள்வி இணைந்து செயற்­ப­டு­வது  தொடர்பில்  திட்டம் உள்ளதா? 

பதில் கிராம மட்ட மக்கள்  இரண்டு தரப்பும்  இணையவேண்டும் என்று  விரும்புகின்றனர்.  ஆனால் அதற்கு  தலைவர்கள்  பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதுதான் உண்மையாகும் என்றார்.