கல்­முனை மாந­கர சபை­யினை நான்கு பிர­தேச சபை­க­ளாக பிரித்து அதில் ஒன்­றினை தமிழ் மக்­க­ளுக்­கான அல­காக உரு­வாக்க தமிழ் மற்றும் முஸ்லிம் தலை­வர்­க­ளி­டையே இணக்­கப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்­சி அமைச்சர் பைஸர் முஸ்­தபா தலை­மையில் நேற்று இடம்­பெற்ற விசேட சந்­திப்­பி­­லேயே இவ்வாறு தீர்­மானம் எட்­டப்­பட்­டுள்­ளது.  தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் முஸ்லிம் மக்­க­ளது பிர­தி­நி­தி­க­ளுக்கும்  இடை­யி­லான பேச்­சு­வார்த்தை நேற்று வெள்­ளிக்­கி­ழமை மாகாண சபைகள் உள்­ளூ­ராட்­சி­மன்ற அமைச்சில் இடம் பெற்­றது.

அமைச்சர் பைஸர் முஸ்­தபா தலை­மையில் நடை­பெற்ற இந்­தக்­கூட்­டத்தில் கூட்­ட­மைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்­பந்­த­னுடன் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை சேனா­தி­ராஜா, எம்.ஏ.சுமந்­திரன், கோடீஸ்­வரன் உட்­பட பலரும் கலந்­து­கொண்­டனர் முஸ்லிம் கட்­சி­களின் சார்பில் முஸ்­லிம் ­காங்­கி­ரஸின் உப­த­லை­வரும் பிரதி அமைச்­ச­ரு­மான ஏ.எச்.எம்.ஹரீஸ், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதா­வுல்லா, அசாத் சாலி  ஆகியோரும் பங்கேற்றனர்.

சந்திப்பையடுத்து  ஊட­கங்­க­ளுக்கு கருத்து  தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்­க­ளுக்கும் முஸ்லிம் மக்­க­ளுக்கும் எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டாத வகையில் தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அனைத்து மக்­களும் ஒன்­றி­ணைந்து சமத்­து­வ­மாக வாழ வேண்டும். இதற்­க­மைய கல்­முனை மாந­கர சபை நான்­காக பிரிக்­கப்­படும் . 

அவ்­வாறு பிரிக்­கப்­படும் பிர­தேச சபை களில் ஒரு சபை தனி தமிழ் மக்­களின் கலா­சா­ரங்­களைப் பின்­பற்றும் வகையில் செயற்­படும். இதற்கு முஸ்லிம் தரப்­பி­ட­மி­ருந்து ஏக­ம­ன­தாக இணக்­கப்­பாடு கிடைக்­க­ப்­பெற்­றது. இந்­நி­லையில் கல்­முனை விவ­காரம் தீர்­வினை எட்­டி­யுள்­ளது என்று கூறினார்.

இந்த தீர்­மா­னத்தை உறு­திப்­ப­டுத்தும் முக­மாக எதிர்­வரும் 22 ஆம் திகதி அனைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் தலை­வர்கள் மீண்டும் சந்­தித்து கலந்­து­ரை­யாட தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த சந்­திப்பு எதிர்க் கட்சி தலை­வரின் அலு­வ­ல­கத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது. 

இவ்­வி­டயம் தொடர்­பாக மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்­சி­மன்ற  அமைச்சர் பைசர் முஸ்­தபா குறிப்­பி­டு­கையில் ,

இழுத்­த­டிக்­கப்­பட்ட இரு சமூகம் சார்ந்த பிரச்­சி­னைக்கு தற்­போது தீர்வு காண முடிந்­துள்­ளது. தமிழ் மற்றும் முஸ்லிம் தலை­வர்கள் கலந்­து­ரை­யாடி இணக்­கப்­பா­ட்டுக்கு வந்­துள்­ளனர். எனவே தான் பிரச்­சி­னைக்கு சுமு­க­மான தீர்­வினை பெற்­றுக்­கொள்ள முடிந்­தது.  தமிழ் மக்­க­ளுக்கு தனி­யான பிர­தேச சபை வேண்டும் என்ற எதிர்க்­கட்சி தலை­வரின் கோரிக்­கைக்கு முஸ்லிம் பிர­தி­நி­திகள் ஏகமன­தாக இணக்கம் தெரி­வித்தனர்.

இன்று கலந்­து­ரை­யா­டப்­பட்ட விட­யங்­களில் மாற்றங்கள் ஏற்படுமாயின் கல்முனை மாநகர சபையினை நான்காக பிரிப்பதற்கு அனுமதி வழங்கமாட்டேன் . உள்ளூராட்சி சபை தேர்தல் இடம் பெறுவதற்கு முன்னர் இதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார் 

இந்த சந்திப்புக் குறித்து கருத்துத் தெரி வித்த தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா கல்முனை மாநகர சபையை  நான் காக பிரிப்பதற்கு தமிழ் முஸ்லிம் தலைவர் களிடையே இணக்கம் காணப்பட்டுள்ளது. இது குறித்த எனது யோசனைகளும் பரிசீல னைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சுட்டிக்காட்டினார்..