கற்பை ஏலத்தில் விட்ட கல்லூரி மாணவிக்கு நேர்ந்தது என்ன தெரியுமா?

Published By: Digital Desk 7

17 Nov, 2017 | 03:51 PM
image

தனது கற்பை ஏலத்தில் விட்ட கல்லூரி மாணவியை அபுதாபியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சுமார் 2.5 மில்லியன் யூரோ கொடுத்து வாங்கியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவி கிசெல்லே ஜெர்மனியைச் சேர்ந்த சின்ரெல்லா எஸ்கார்ட்ஸ் என்ற இணையதளத்தில் தனது கற்பை ஏலத்தில் விட்டார். இதையடுத்து அவருக்கு கடும் போட்டி நிலவியது. ஏலத்தின் முடிவில் அபுதாபியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சுமார் 2.5 மில்லியன் யூரோ கொடுத்து வாங்கியுள்ளார்.

இந்த போட்டியில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் மற்றும் ரஷ்ய அரசியல்வாதி ஒருவரும் போட்டியிட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்த மாணவி கூறுகையில்,

"நான் 2.5 மில்லியன் யூரோ மதிப்புக்கு விலை போவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனது கனவு நனவாகிவிட்டது, மேலும் படிப்பு செலவு மற்றும் ஊர் சுற்றும் செலவுக்காக தான் இதை செய்தேன்" என கூறியுள்ளார்.

சின்ரெல்லா எஸ்கார்ட்ஸ் இணையதளம் மூலம்  இதற்கு முன் ரஷ்ய மாடல் அழகி ஒருவர் 2 மில்லியன் யூரோக்கு ஏலம் போனார் என்பதும் குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right