பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Image result for நாமலுக்கு எதிரான வழக்கு

கவர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் 4 பேர் இணைந்து, கவர்ஸ் கோப்ஸ் நிறுவனத்தில், 15 மில்லியன் ரூபாய் மோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஐவருக்கும் எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.