கொழும்பின் சில பகுதிகளில் நடைபெற்று வரும் நிலத்தடி நீர் குழாய் திருத்த பணிகள் காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், ஹெட்டியாவத்தை சந்தியில் இருந்து இப்பாவத்தை சந்திவரையிலான பாதையின் போக்குவரத்து இன்று காலை 9 மணி தொடக்கம் 20 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை மட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஹெட்டியாவத்தை சந்தியில் இருந்து இப்பாவத்தை சந்தி வரையிலும், கொட்டாஞ்சேனை சுற்றுவட்டம் 200 மீட்டர் வரையிலான பகுதி, மட்டக்குளி பாம் வீதி பிரதேசத்தின் 110 மீட்டர் வரையினான பகுதி இவ்வாறு மூடப்பட்டிருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.