சார்க் கலாசார நிலையம் ஏற்பாடு செய்துள்ள ஏழாவது வருடாந்த சார்க் திரைப்பட விழா எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி 25ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இம்முறை ஆப்கான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவுகள், நேபாளம், இலங்கை ஆகிய சகல அங்கத்துவ நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும், குறும் படங்களும் இங்கு திரையிடப்படவுள்ளன. 

கறுவாக்காடு - பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன திரையரங்கில் இவை திரையிடப்படவுள்ளன. இதற்கான அனுமதி இலவசம்.

இதனுடன் இணைந்ததாக எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை சர்வதேச நிபுணர்களின் பங்கேற்புடன் திரைப்பட பாடநெறியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆலோசகர் தனுஷ்க்க குணதிலக்க தெரிவித்தார்.