மட்டக்களப்பு, செங்கலடியில் உழவு இயந்திரத்தில் சிக்கி ஏழைக்கூலி தமிழ் இளைஞரொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

செங்கலடி பகுதியிலுள்ள தோடிச்சோலை ஆற்றில் மண் ஏற்றிவரும் போது கொடுவாமடு தம்பானவெளி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய லவன் என்ற இளைஞன் உழவு இயந்திர ஓட்டுனரின் அருகில் அமர்ந்திருந்த வேளை சடுதியாக சறுக்கி விழுந்த போது அவ் இளைஞரின்  நெஞ்சுப்பகுதியில் உழவு இயந்திரத்தின் டயர்  ஏறியதில்  இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரின் குடும்பம் மிகவும் வறுமையான கூலித்தொழில் செய்து அன்றாடம் சீவியம் நடத்தும் குடும்பமாகும்.

மேலதிக விசாணைகளை செங்களடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.