தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டி­களை எதிர்­வரும் 2020ஆம் ஆண்டு இலங்­கையில் நடத்த முடி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது. அதற்­காக திய­கம மைதா­னத்தை புன­ர­மைப்­ப­தற்­காக வரவு - செலவுத் திட்டத்தில் நிதியும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்கை, இந்­தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்­க­ளாதேஷ், ஆப்­கா­னிஸ்தான், பூட்டான் மற்றும் மாலை­தீவு உட்­பட 8 நாடுகள் பங்­கேற்கும் தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டிகள் குறித்த நாடு­களின் விளை­யாட்டு நாளேட்டுகளில் முக்­கிய இடத்தைப் பிடித்­துள்­ளன.

கடை­சி­யாக 2016ஆம் ஆண்டு 12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டிகள் இந்­தி­யாவின் குஹாத்தி மற்றும் மேகா­லயா ஆகிய இடங்களில் நடை­பெற்­றது. இதில் தொடரை நடத்­திய இந்­தியா அதிக தங்கப் பதக்­கங்­களை வென்று முத­லி­டத்தைப் பிடித்­தது. இரண்­டா­வது இடத்தை இலங்கை அணி பிடித்­தது.

இந்­நி­லையில் 13ஆவது தெற்­கா­சியப் போட்­டிகள் நேபா­ளத்தில் 2018ஆம் ஆண்டு நடத்த பொறுப்­பேற்­றி­ருந்­தது. ஆனால் அவர்­களால் குறித்த நேரத்தில் நடத்­த­மு­டி­யாமல் போகும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் இந்தத் தொடர் 2020ஆம் ஆண்டில் இலங்கையில் நடத்த முடிவுசெய்யப் பட்டுள்ளது.