(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நீதிமன்றில் மேன்முறையீடு செய்தமைக்கு கூட்டு எதிர்க்கட்சியே காரணம் என அஜித் பீ. பெரேரா சபையில் தெரிவித்ததை அடுத்து இன்று ஆளும் எதிரணியினருக்கு இடையில் கடுமையான வாக்குவாதமும் குழப்பமும் ஏற்பட்டமையினால் சபையில் பெரும் சர்ச்ச‍ை ஏற்பட்டது. 

இதன்போது கூட்டு எதிர்க்கட்சியினர் மேன்முறையீடு செய்யவில்லை. அரசாங்கத்திற்கு ஆதரவான சுதந்திரக் கட்சியினரே செய்ததாக கூட்டு எதிர்க்கட்சியின் விஜேசேகர எம்.பி தெரிவித்ததை அடுத்து ஆளும் தரப்பின் சுதந்திரக்கட்சி சார்பாக டிலான் பெரேரா கடும் எதிர்ப்பினை வெளியிட்டார். இதனால் சபையில் குழப்பங்கள் ஏற்பட்டன.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் இறுதிநாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சர்ச்சை ஏற்பட்டது.