(எம்.ஆர்.எம்.வஸீம்)

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒருதொகை எரிபொருளை பாதுகாப்புக்காக கையிருப்பில் வைக்காதமை மன்னிக்க முடியாத குற்றம். நிர்வாகம் தனது கடமையை செய்ய தவறியுள்ளது என எரிபொருள் பிரச்சினை தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் தலைவரும் விசேட திட்டங்கள் தொடர்பான அமைச்சருமான சரத் அமுனுகம தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.