‘உப்பை மட்டும் உங்களுடைய உணவிலிருந்து நீங்கள் அப்புறப்படுத்திவிட்டால், உங்களின் ஆரோக்கியத்திற்கு எந்த குறைபாடுகளும் வராது. மனிதனின் உடல் ஆரோக்கியத்தில் உப்பினால் உண்டாகக்கூடிய கெடுதல் தான் அதிகம். 

தற்போதைய சூழலில் ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 12 கிராம் அளவிற்கு உப்பை பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஒரு நாளைக்கு புள்ளி 5 அளவிற்கான உப்பே போதுமானது. இன்னும் தெளிவாக குறிப்பிடவேண்டும் என்றால் உப்பேயில்லாமல் சாப்பிடுவது தான் ஆரோக்கியமானது. 

உப்பைச் சேர்த்து சாப்பிடுவதால் என்ன பாதிப்பு உண்டாகிவிடும் என்று கேட்பவர்களுக்கு, உப்பின் அளவு அதிகரித்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதன் காரணமாக பக்கவாதம் எனப்படும் ஸ்ட்ரோக் பாதிப்பு அவசியம் ஏற்படும்.

இன்றைய திகதிகளில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில், பதப்படுத்தப்பட்டு பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் நூடுல்ஸ் மற்றும் அனைத்து வகையான உணவுப் பொருள்களும் உப்பின் அளவு அதிகம். அதனால் அதனை முற்றாகத் தவிர்க்கவேண்டும். அத்துடன் இது போன்றவைகளின் பயன்பாட்டை குறைக்கும் வகையிலான விழிப்புணர்வையும் பெறவேண்டும். என்கிறார் டொக்டர் கிரஹாம் மெக்கிரிகோர். இவர் WASH என்ற உப்பு பயன்பாட்டிற்கு எதிரான சர்வதேச அமைப்பின் தலைமை நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்