மனைவியை தாக்கிய கணவன் : சுயதொழில் நிறுவனத்தின் முகாமையாளர் கூறும் காரணம்

Published By: Digital Desk 7

16 Nov, 2017 | 02:23 PM
image

வவுனியாவில் இன்று  காலை 11மணியளவில் கண்டி வீதியிலுள்ள சுயதொழில் வழங்கும் நிறுவனத்திற்குச் சென்ற குடும்பத் தலைவி ஒருவர் மீது அவரது கணவன் சுயதொழில் பெறும் அலுவலகத்திற்குள் வைத்துத் தாக்கியுள்ளதாக சுயதொழில் வழங்கும் நிறுவனத்தின முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா கண்டி வீதியில் இயங்கிவரும் சுயதொழில் நிறுவனம் ஒன்றிற்கு உதவி பெறுவதற்காக மகாறம்பைக்குளம் பகுதியிலுள்ள குடும்பப் பெண் ஒருவர் சென்று தனது சுயதொழில் திட்டத்திற்கு உதவி செய்யுமாறு தெரிவித்து 10 வீதமான பணத்தினை வைப்புச் செய்துள்ளார்.

இதையடுத்து இன்று காலை அந்நிறுவனத்திற்குச் சென்ற குறித்த குடும்பத்தலைவியின் கணவர் மனைவியை சுயதொழில் அலுவலகத்திற்குள் வைத்து தனது அனுமதியின்றி சுயதொழில் பெறுவதற்கு முயற்சித்துள்ளதாகத் தெரிவித்து தாக்கியதுடன் இதை தடுத்து நிறுத்தச் சென்ற சுயதொழில் அலுவலகர்கள் மீதும் தாக்க முற்பட்டுள்ளார்.

இதையடுத்து மனைவி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளதாகவும் சுயதொழில் அலவலகத்தினரும் தமது அலுவலகத்திற்குள் வந்து அங்கு பணிபுரியும் அலுவலகர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளதாகவும் தெரிவித்து முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்யவுள்ளதாகவும் சுயதொழில் நிறுவனத்தின் முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 09:52:55
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08