தலை மன்னாரில் கேரளா மற்றும் போதை மாத்திரைகள் மீட்பு.!

Published By: Robert

16 Nov, 2017 | 12:45 PM
image

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ்ஸில் இருந்து சுமார் 21 கிலோ கேரளா கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டில் இருந்து ஒரு தொகை போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பேசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைமன்னாரில் இருந்து நேற்று இரவு 9.15 மணிக்கு கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பஸ் ஒன்றில் கஞ்சாப்பொதிகள் கொழும்புக்கு கொண்டு செல்லப்படுவதாக மன்னார் பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மன்னார் பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக பேசாலை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஆர்.டி.எம்.சிறில் தலைமையில், உதவி பொலிஸ் பரிசோதகர் ஜி.ஜி.பிரியந்த மற்றும் பொலிஸ் சார்ஜன், பொலிஸ் கொஸ்தபில்கள் அடங்கிய குழுவினர் நேற்று இரவு தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பஸ்ஸை வங்காலைப்பாடு சந்தியில் இடை மறித்து சோதனையிட்டனர்.

இதன்போது குறித்த பஸ்ஸில் இருந்து சுமார் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான 21 கிலோ 451 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சாப்பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளதோடு பஸ்ஸில் இருந்த நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் தலைமன்னாரில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று பேசாலை பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன்போது குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 3440 போதை மாத்திரைகளையும் மீட்டுள்ளனர்.

தற்போது குறித்த சந்தேக நபர் பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

விசாரணைகளின் பின் குறித்த நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, மீட்கப்பட்ட கஞ்சாப்பொதிகள் மற்றும் போதை மாத்திரைகள் என்பன நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பேசாலை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02