வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில்  பாரியளவு நிதி மோசடியில் ஈடுபட்ட வர்த்தகர் தலைமறைவாகியுள்ளதாக வவுனியா மற்றும் மன்னார் பொலிஸ் நிலையங்களில் பல முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேசத்தில் நகை கடை வைத்து தொழில் புரிந்து வந்த ஜெயசீலன் என்பவர் அண்மை காலமாக பலரிடம் பல இலட்சங்களை பெற்றதுடன், வங்கிகளிலும் கடன்களை பெற்றுக்கொண்டு பணத்தை சேகரித்து குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதில் வவுனியா வர்த்தகர்கள் சிலரும் பல இலட்சங்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களில் 5 கோடி ரூபாய்க்கு மேலாக நிதி மோசடியில் குறித்த நபர் ஈடுபட்டுள்ளார் என தெரியவருகின்றது.