மாணவிக்கு அறிவுரை சொன்ன ஆசிரியைக்கு அச்சுறுத்தல்

Published By: Devika

16 Nov, 2017 | 11:47 AM
image

சட்டையின் வாட்டிப் பகுதியைப் பிரித்து விடும்படி அறிவுரை சொன்ன ஆசிரியைக்கு, குறித்த மாணவியின் தந்தை அச்சுறுத்திய சம்பவம் மதுரங்குளி பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

பதினோராம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவியொருவர் கடந்த பதின்மூன்றாம் திகதி பாடசாலை விதிமுறைகளுக்குப் புறம்பாக குறைவான உயரமுள்ள சீருடையை அணிந்து வந்திருக்கிறார். இதை அவதானித்த ஒழுக்க விதிகளுக்குப் பொறுப்பான ஆசிரியை, சீருடையின் கீழ் வாட்டிப் பகுதியை அவிழ்த்துவிடுமாறு அறிவுரை கூறினார்.

இது குறித்து மாணவி தன் தந்தைக்கு அலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, மறுநாள் காலை பெற்றோர் சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பாடசாலைக்கு வந்த மாணவியின் தந்தை, குறித்த ஆசிரியை கெட்ட வார்த்தைகளால் திட்டியதுடன் அவரைக் கடுமையாக அச்சுறுத்தியிருக்கிறார்.

இதையடுத்து பாடசாலை அதிபர், பிரதேச கல்விச் செயலகம் மற்றும் பொலிஸ் நிலையத்தில் குறித்த ஆசிரியை புகார் அளித்தார்.

இதன்படி பாடசாலைக்கு வந்த பொலிஸார், பிரச்சினைக்குள்ளான ஆசிரியையிடமும் சக ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தியுள்ளதுடன், குறித்த மாணவியின் தந்தையையும் விசாரணைக்கு உட்படுத்தவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 20:50:15
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03