தேர்­தல் ஆணைக்­கு­ழுவின் முக்கிய கூட்டம் இன்று

Published By: Robert

16 Nov, 2017 | 08:50 AM
image

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்குத் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்ள உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அடங்­கிய வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டுள்ள நிலையில் தேர்தல் தினம் குறித்து தீர்­மானம் எடுக்க இன்று சுயா­தீன தேர்தல் ஆணைக்­குழு கூடு­கின்­றது. 

Image result for தேர்­தல் ஆணைக்­கு­ழு virakesari

இன்று  வியா­ழக்­கி­ழமை கூட­வுள்ள சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு  தேர்தல் குறித்த திக­தியை உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக அறி­விக்க உள்­ளது. இதே­வேளை எதிர்­வரும் ஜன­வரி மாதம் 20 ஆம் திகதி முதல் 31 ஆம் திக­திக்­குள்­ளான திக­தியில் உள்­ளு­ராட்­சி­மன்றத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு எதிர்­பார்ப்­ப­தாக அர­சாங்கம் அறி­வித்­தி­ருந்­தது.

வெளி­யி­டப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் குறித்த வர்த்­த­மா­னியில் 4 ஆயி­ரத்து 840 தொகு­திகள் வகுக்­கப்­பட்­டுள்­ள­துடன் 341 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. இந்த உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­காக 8 ஆயி­ரத்து 356 உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

இதே­வேளை இறு­தி­யாக விகி­தா­சார முறையில் நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் போது நாட்டில் முன்­னூற்று முப்­பத்­தைந்து உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் இருந்­த­துடன் அம்­மன்­றங்­க­ளுக்கு நான்­கா­யி­ரத்து நானூற்று எண்­பத்­தாறு உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­பட்­டனர்.ஆகவே புதிய தேர்தல் முறை­யூ­டாக நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் கடந்த தேர்­த­லை­விட ஆறு உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மேல­தி­க­மாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அதற்­கி­ணங்க அக­ர­ப­தன, கொட்­ட­கல, மஸ்­கெ­லிய, நோர்வூட், பொல­ன­றுவை ஆகிய பிர­தேச சபைளும் பொல­ன­றுவை மாநா­கர சபை­யுமே புதிய உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

 வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தும் திகதியினை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் அதிகாரம் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:14:14
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53