காலி கடல் பகுதியில் மீனவர் படகொன்று மற்றுமொரு மீன்பிடிக் கப்பலொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் காணாமல்போன 5 மீனவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர்  தெரிவித்துள்ளனர்.

ஹிக்கடுவை பகுதியில் இருந்து  ஆறு மீனவர்கள் கடந்த 31 ஆம் தகதி இரவு காலி கடல்பகுதியில் மீன்பிடிக்காக சென்றுள்ளனர்.

குறித்த ஆறு மீனவர்களில்  ஒருவர் மாத்திரம் மற்றுமொரு மீன்பிடி கப்பலில் கரைக்கு திரும்பியுள்ள நிலையில், மற்றைய 5 மீனவர்களும் இன்று கடற்படையினரால் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.