களனி கேபிள்ஸ் வீட்டு பாவனைக்கான LED Clear Bulb வகைகள் அறிமுகம்

Published By: Priyatharshan

02 Feb, 2016 | 04:43 PM
image

வீட்டுப் பாவனைக்கு உகந்த களனி LED Clear Bulb வகையை இலங்கைச் சந்தையில் களனி கேபிள்ஸ் பிஎல்சி அறிமுகம் செய்திருந்தது. 

ஒளிபுகக்கூடிய தன்மை வாய்ந்த இந்த குமிழ், இலங்கையர்களால் பல ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட மின்குமிழ்களை ஒத்த தோற்றத்தை கொண்டதாக அமைந்துள்ளன. 

இவை அதிகளவு ஒளியை வெளிவிடும் இயல்பையும் கொண்டுள்ளன. இந்த தயாரிப்பு 2 வாற்று முதல் 8 வாற்று வரை காணப்படுவதுடன், Daylight மற்றும் Warm Light வகைகளில் தயாரிக்கப்படுகின்றன. 

இலங்கையில் பாதுகாப்பான இலத்திரனியல் மற்றும் தொலைபேசி கேபிள்கள் உற்பத்தில் ஈடுபடும் முதல் தர வர்த்தக நாமம் எனும் பெருமையை கொண்டுள்ள களனி கேபிள்ஸ் பிஎல்சி, இலங்கைச் சந்தையில் CFL (Compact Fluorescent Lamp) மற்றும் GLS (General Lighting System) ஆகியவற்றை 2013 இல் அறிமுகம் செய்திருந்த விசேட பெருமையை இந்த நிறுவனம் கொண்டுள்ளது. 

“பாதுகாப்புடன் ஒளியை நோக்கி” எனும் வர்த்தக குறியீட்டு சன்னாமத்துக்கமைய உற்பத்தி செய்யப்படும் களனி CFL குமிழ்கள் சந்தையில் மிகவும் வெற்றிகரமான நிலையை எய்தியுள்ளதுடன், எவ்வித வாடிக்iகாயர் முறைப்பாடுகளையும் இதுவரையில் பெறவில்லை. தனது குமிழ்கள் தெரிவுகளுக்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் புதிய Kelani LED Clear Bulb வகையை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் அனில் முனசிங்க கருத்து தெரிவிக்கையில், 

“சந்தையில் வாடிக்கையாளர்கள் எமக்கு வழங்கியிருந்த ஊக்குவிப்பின் பிரதிபலிப்பாக இந்த புதிய தயாரிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Kelani LED Clear Bulb மூலமாக 80 சதவீதம் வரை மின்சாரம் சேமிக்கப்படுவதுடன், நாட்டு மக்களின் மின்சார கட்டணப் பட்டியல்களை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது. 

குறைந்த மின்சார கட்டணப் பட்டியல்கள் எந்தவொரு குடும்பத்துக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எமது இலங்கையர்களின் குழந்தைகள் இரவில் படிக்கும் போது, பெருமளவு நிவாரணத்தை வழங்கும் வகையில் இந்த மின்குமிழ்கள் அமைந்துள்ளன. எனவே, Kelani LED Clear Bulb வகைகளை எந்தவொரு வீட்டுக்கும் பொருத்தமான தயாரிப்பாக கருத முடியும்” என்றார்.

களனி கேபிள்ஸ் பிஎல்சியின் வர்த்தக நாம அபிவிருத்தி முகாமையாளர் சன்ன ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில், 

“சந்தையில் காணப்படும் LED மின்குமிழ்கள் இரு பிரிவுகளில் அமைந்துள்ளன. எனவே பூச்சிகள் விளக்குகளினுள் புகந்து விளக்குகளின் உள்ளக பகுதிகள் ஒளிர்வை குறைக்கின்றன. களனி  LED தெளிவான மின்குமிழ்கள் ஒரு பிரிவாக விற்பனையாகின்றன. இதன் காரணமாக வெளிச்சம் முழுமையாக வெளியிடப்படுகிறது. மற்றுமொரு அம்சம், LED குமிழ்களிலிருந்து ஒளி வெளியேறும் விதம் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஏனைய சகல வகையான LED குமிழ்களும் conical தோற்ற ஒளியை வெளியிடும் போது, களனி LED மின்குமிழ்கள் பரந்தளவில் ஒளியை வெளியிடுகின்றன. 

புதிய குமிழ்களுக்கு களனி வர்த்தக நாமமும் சிறந்த நம்பிக்கையை வழங்குகின்றன. சகல களனி தயாரிப்புகளுக்கும், களனி LED தெளிவான மி;ன்குமிழ்களுக்கும் நாம் பொறுப்பு வகி;க்கிறோம். எமது வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனை முகவர்கள் ஆகியோர் களனி LED குமிழ்களின் தரம் பற்றி அதிகளவு நம்பிக்கையை கொள்ள முடியும்” என்றார்.

களனி கேபிள்ஸ் என்பது 100 வீதம் இலங்கையை சேர்ந்த கம்பனியாகும். சுமார் 44 வருட காலமாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 2008 இல் களனி கேபிள்ஸ் பிஎல்சி “சுப்பர் பிரான்ட்” நிலையை எய்தியிருந்தது. குறிப்பாக நிபுணத்துவம் வாய்ந்த சிறப்பாண்மைச் செயற்பாடுகளுக்காக கம்பனி இந்த நிலையை எய்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. 2013 இல் இடம்பெற்ற SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் வழங்கலில், இதே பிரிவில் தங்க விருதை தனதாக்கியிருந்தது. SLITAD மக்கள் அபிவிருத்தி 2013 விருதகள் வழங்கும் நிகழ்வில், தனது ஊழியர்களின் பயிற்சிகள் மற்றும் மற்றும் நலன்புரி செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தமைக்காக தங்க விருதையும் தனதாக்கியிருந்தது. 

களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5S விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 

2015 இல் களனி கேபிள்ஸ் பிஎல்சி ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் விருதை தனதாக்கியிருந்தது. களனி கேபிள்ஸ் இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்கள் உற்பத்தி பிரிவு, 2015 தேசிய பசுமை விருதுகள் வழங்கலில் நிலைபேறான அபிவிருத்திக்காக கௌரவிக்கப்பட்டிருந்தது. 2015 இல் நிறுவனம் SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் விருதையும் தனதாக்கியிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57
news-image

யாழில் முதல் முறையாக மருந்து வில்லைகள்...

2024-03-11 16:16:39
news-image

KIST தனது சோஸ் வகைகளை புதிய...

2024-03-08 10:44:09
news-image

முன்னேற்றத்தின் பங்காளியாக 135 ஆண்டுகால பெருமை...

2024-03-06 17:32:13
news-image

பிரீமியம் அந்தஸ்தை பெற்றுள்ள Radisson Hotel...

2024-03-04 16:26:08
news-image

பான் ஏசியா வங்கி 2023 நிதியாண்டில்...

2024-02-26 16:45:55
news-image

புரத தினம் 2024: இவ்வருடத்தின் எண்ணக்கரு...

2024-02-26 16:58:38
news-image

Sun Siyam பாசிக்குடாவில் உள்நாட்டவர்களுக்காக விசேட...

2024-02-26 16:58:18