புத்தரை பச்சை குத்திய பெண்ணுக்கு நட்ட ஈடு; அரசுக்கு மீயுயர் நீதிமன்றம் உத்தரவு

Published By: Devika

15 Nov, 2017 | 04:49 PM
image

புத்தரின் உருவத்தை கையில் பச்சை குத்திக்கொண்டதற்காக தடுத்து வைக்கப்பட்ட பிரித்தானிய பெண்ணுக்கு ஐந்து இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்குமாறு அரசுக்கு மீயுயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நயோமி கோல்மன் என்ற பிரித்தானிய சுற்றுலாப் பயணியான பெண் அண்மையில் இலங்கை வந்திருந்தார். அவரது கையில் புத்தரின் உருவம் பச்சை குத்தப்பட்டிருந்ததைக் காரணம் காட்டி கட்டுநாயக்க பொலிஸார் அவரை கைது செய்து விளக்கமறியலில் வைத்தனர்.

மீயுயர் நீதிமன்றில் இது குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அதன் தீர்ப்பு இன்று (15) வழங்கப்பட்டது.

நயோமி புத்தரின் உருவத்தைப் பச்சை குத்திக்கொண்டது அவரது அடிப்படை மனித உரிமை என்றும், அவரைக் கைது செய்ததன் மூலம் அவரது அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்றும் கூறிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, நயோமிக்கு நட்ட ஈடாக ஐந்து இலட்ச ரூபாவையும், வழக்குக்காக அவர் செலவிட்ட இரண்டு இலட்ச ரூபாவையும் வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், நயோமியை கைது செய்த கட்டுநாயக்க பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோர் தலா ஐம்பதாயிரம் ரூபாவை நயோமிக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17