கிளிநொச்சி, பூநகரி, கிராஞ்சி பகுதியில் வெடிபொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. வீட்டிற்குள் நுழைந்த பாம்பு ஒன்றை அடித்து தீயிடுகையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் நேரில் கண்டவர் தெரிவிக்கையில்,

நேற்று இரவு அவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று சென்றதாகவும், அதை அடித்து தமக்கும் காண்பித்துவிட்டு தீயிட்டுக்கொண்டிருக்கையில் வெடிச் சத்தம் கேட்டது. பின்னர் வெடிச் சம்பவத்தில் குறித்த நபர் காயமடைந்த நிலையில் அவரை வைத்தியாலைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.

குறித்த நபரின் குடும்பம் மிகவும் வறுமையானது எனவும், பிள்ளைகள் கல்விக்காக கஷ்டப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.